நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரை அச்சுறுத்திய ரியல் மாட்ரிட் வீரருக்கு அறுவைச் சிகிச்சை!

ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

அறுவைச் சிகிச்சையை முடித்த அன்டோனியோ ரூடிகர். - படங்கள்: இன்ஸ்டா / அன்டோனியோ ரூடிகர்

Updated On :29 ஏப்ரல் 2025, 6:33 pm IST

ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் தனது ஆக்ரோஷமான பாணிக்கு புகழ்பெற்றவர். சிறந்த டிஃபெண்டராக அறியப்படும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்கு விளையாடி வருகிறார்.

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தின்போது ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர், வினிசியஸ் ஜுனியர் நடுவரின் மீது பாட்டிகளையும் ஐஸ் கட்டிகளையும் தூக்கி வீசுவார்கள்.

நடுவரைத் தாக்கில் 2 ஆண்டுகள் அல்லது 10-12 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பின்னர், இதற்காக மன்னிப்புகோரி ரூடிகர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறுவைச் சிகிச்சை செய்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

7 மாதங்களுக்கும் அதிகமாக கடுமையான வலியுடனே விளையாடி வந்தேன். மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்தது முற்றிலும் எதிர்பாராத தவிர்க்க இயலாத ஒன்று. தற்போது, வலியின்றி இருக்கிறேன்.

மருத்துவக் குழுவுக்கு நன்றி. முக்கியமாக ரியல் மாட்ரிட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு மிக்க நன்றி.

நேஷ்னல் லீக், கிளப் கால்பந்து உலகக் கோப்பை என இரண்டு பெரிய தொடர்கள் இருக்கின்றன. விரைவில் குணமடைந்து இந்தப் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு வாரம் எவ்வளவு முன்னேறுகிறேன் என்பதை கவனிக்க வேண்டும்.

விரைவில் குணமடைய என்னால் முடிந்ததைச் செய்வேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். உங்கள் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.