ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த பார்சிலோனா!

லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பார்சிலோனா எஃப்சி, இந்த சீசனில் வெற்றிக் கோப்பையை தக்கவைத்தது.

News image

சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த பார்சிலோனா - AP

Updated On :12 மே 2026, 1:53 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பார்சிலோனா எஃப்சி, இந்த சீசனில் வெற்றிக் கோப்பையை திங்கள்கிழமை தக்கவைத்தது. அந்த அணி 29-ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்றுள்ளது.

"எல் கிளாசிகோ' ஆட்டம் என்று வர்ணிக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளின் மோதல், திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் வெற்றி கண்டது.

போட்டியின் இந்த 35-ஆவது சுற்று ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலமாக பார்சிலோனா 91 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது. 77 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட், எஞ்சியிருக்கும் 3 சுற்று ஆட்டங்களில் வென்றாலும் பட்டியலில் முன்னேற முடியாது என்று ஆனதை அடுத்து, பார்சிலோனா வசம் சாம்பியன் பட்டம் சென்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவுக்காக மார்கஸ் ராஷ்ஃபோர்டு (9') அருமையான ஃப்ரீ கிக் மூலமாக கோல் கணக்கைத் தொடங்க, ஃபெரான் டோரஸ் (18') அதை 2-ஆக அதிகரித்தார். 51-ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா வீரர் டேனி ஆல்மோ, ரியல் மாட்ரிட் வீரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அதைத் தொடர்ந்து இரு தரப்பு வீரர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆல்மோவுக்கு "யெல்லோ கார்டு' வழங்கப்பட்டது.

63-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட்டுக்காக ஜூட் பெலிங்கம் அடித்த கோல், "ஆஃப் சைடு' என நிராகரிக்கப்பட்டது. போட்டியின் வரலாற்றில் இவ்வாறு "எல் கிளாசிகோ' ஆட்டத்தின் மூலமாக சாம்பியன் முடிவானது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 1932-இல் இவ்வாறு ரியல் மாட்ரிட் சாம்பியனாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.