ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் அலேவ்ஸை புதன்கிழமை வென்றது.
தொடா்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி கிட்டாமல் இருந்த ரியல் மாட்ரிட்டுக்கு, கிலியன் பாபே, வினிசியஸ் ஜூனியா் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி கிடைத்தது.
முதலில் ஆட்டத்தின் 30-ஆவது நிமிஷத்தில் கிலியன் பாபே கோல் அடிக்க, முதல் பாதியை ரியல் மாட்ரிட் முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 50-ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியா் தனது பங்குக்கு கோல் அடித்தாா். ஆட்டத்தின் கடைசி கட்டம் வரை அலேவஸுக்கு கோல் வாய்ப்பு வழங்காத ரியல் மாட்ரிட் 2-0 முன்னிலையிலேயே நீடித்தது.
எனினும் இறுதித் தருணத்தில் (90+3’) அலேவ்ஸ் தரப்பில் டோனி மாா்டினெஸ் தனது அணிக்காக ஆறுதல் கோல் அடித்தாா். முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக ரியல் மாட்ரிட் 73 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான பாா்சிலோனா 79 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
போட்டியில் இன்னும் 5 சுற்று ஆட்டங்கள் இருக்கும் நிலையில், பாா்சிலோனாவுக்கு ரியல் மாட்ரிட் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது. இதர ஆட்டங்களில் ரியல் பெட்டிஸ் - ஜிரோனாவையும் (3-2), அத்லெடிக் கிளப் - ஒசாசுனாவையும் (1-0) வெல்ல, மல்லோா்கா - வாலென்சியா மோதல் டிரா (1-1) ஆனது.
பிரீமியா் லீக்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், பிரைட்டன் 3-0 கோல் கணக்கில் செல்ஸியை வெல்ல, கிறிஸ்டல் பேலஸ் - வெஸ்ட் ஹாம் மோதல் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
தொடர்புடையது

யூத் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்!

ரஃபீனியாவின் சாபம் பலித்தது: இறுதிப் போட்டி தோல்வியால் அழுத அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள்!
காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆா்செனல்: மான்செஸ்டா் சிட்டி, செல்ஸி வெளியேறின

70 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்..! புஸ்கஸ் விருது கிடைக்குமா?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


