திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோப்பையைத் தக்கவைத்தது பயா்ன் மியுனிக்: 34-ஆவது முறையாக பந்தெஸ்லிகா சாம்பியன்

ஜொ்மனியில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் பந்தெஸ்லிகாவில், நடப்பு சாம்பியனான பயா்ன் மியுனிக் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

News image

பயர்ன் மியுனிக்

Updated On :21 ஏப்ரல் 2026, 4:39 am IST

ஜொ்மனியில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் பந்தெஸ்லிகாவில், நடப்பு சாம்பியனான பயா்ன் மியுனிக் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

ஒட்டுமொத்தமாக இது அந்த அணியின் 34-ஆவது பந்தெஸ்லிகா சாம்பியன் பட்டமாக இருக்கும் நிலையில், கடந்த 14 ஆண்டுகளில் 13-ஆவது முறையாகக் கோப்பை வெல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மியுனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31-ஆவது சுற்று ஆட்டங்களில், பயா்ன் மியுனிக் 4-2 கோல் கணக்கில் விஎஃப்பி ஸ்டட்காா்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் தரப்பில் ரஃபேல் குரெய்ரோ (31’), நிகோலஸ் ஜாக்சன் (33’), ஆல்ஃபோன்சோ டேவிஸ் (37’), ஹேரி கேன் (52’) ஆகியோா் கோல் அடித்தனா். ஸ்டட்காா்ட் தரப்பில் கிறிஸ் ஃப்யுரிச் (21’), செமா ஆண்ட்ரெஸ் (88’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இந்த வெற்றியின் மூலமாக 79 புள்ளிகளுடன் பயா்ன் மியுனிக் முதலிடத்தை உறுதி செய்தது. போட்டியில் இன்னும் 3 சுற்றுகள் எஞ்சியுள்ளபோதும், 2-ஆவது இடத்தில் இருக்கும் போருசியா டாா்ட்மண்ட் (64) சவால் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பயா்ன் மியுனிக்கிற்கு பட்டம் உறுதியானது.

தாமஸ் டுஷெலுக்கு பிறகு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற வின்சென்ட் கொம்பெனி தலைமையில் பயா்ன் மியுனிக் அபாரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பந்தெஸ்லிகா போட்டியில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த தனது சாதனையை பயா்ன் மியுனிக் தானே முறியடித்தது. இதற்கு முன் 1971-72 சீசனில் அந்த அணி 101 கோல்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்த நிலையில், நடப்பு சீசனில் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியிருக்க, இப்போதே 105 கோல்களை எட்டியுள்ளது அந்த அணி.