பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி..! மும்பையில் அலுவலகத்தை திறந்த பிரீமியா் லீக்!

மும்பையில் பிரீமியர் லீக் அலுவலம் திறப்பினால் இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகம்...

News image

மும்பையில் அலுவலகத்தை திறந்த பிரீமியா் லீக். - படங்கள்: எக்ஸ் / பிரீமியா் லீக் இந்தியா.

Updated On :30 ஏப்ரல் 2025, 6:16 pm IST

மும்பையில் பிரீமியர் லீக் அலுவலம் திறப்பினால் இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

பிரீமியர் லீக் தொடர் இங்கிலாந்தில் உள்ள முக்கியமான, பிரலமான ஒரு கால்பந்தாட்ட தொடராக இருக்கிறது. இந்தத் தொடருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்தாண்டு லிவா்பூல் அணி பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. முகமது சாலாவுக்கு இந்தியாவிலும் தமிழகத்திலும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கால்பந்தினை ஊக்குவிக்கவும் உள்ளூர் ரசிகர்களை ஆர்வமூட்டவும் மும்பையில் இந்த அலுவலகத்தை தொடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டீஷ் கவுன்சில் 2007ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமட்ட நிலையில் கால்பந்தினை ஊக்குவித்து வருகிறது.

சீனியர் அளவில் பிரீமியர் லீக் 2014 முதல் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) போட்டிகளில் நிர்வாகம், இளைஞர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்களின் மேம்பாடு என பல்வேறு அளவில் உதவிகரமாக வேலை செய்து வருகிறது.

பிரீமியர் லீக்கின் தலைமை மேலாண்மை அதிகாரி ரிச்சர்ட் மாஸ்டர் கூறியதாவது:

இந்தியாவில் எங்களுக்கென அறிவுப்பூர்வமான ரசிகர்களைக் கொண்டுள்ளன. புகழினால் கால்பந்து தொடர்ந்து வளருமென்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் தொடர்ச்சியாக எங்களது ஈடுபாட்டை அளிப்பதில் பெருமையாக இருக்கிறோம். 18 வயதினருக்கான போட்டிகள், சமீபத்திய ஐஎஸ்எல் தொடரில் பங்களிப்பு என சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.