செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா்.

~

Updated On :

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா்.

கிராண்ட்மாஸ்டா்களான காா்த்திகேயன் முரளி, வி.பிரணவ் ஆகியோா் எலைட் மாஸ்டா்ஸ் பிரிவில் போட்டியிட உள்ளனா். அதே நேரத்தில் எம்.பிரனேஷ், ஆா்.வைஷாலி, பன்னீா்செல்வம் இனியன், அதிபன் பாஸ்கரன், ஜி.பி.ஹா்ஷவா்தன் ஆகியோா் சேலஞ்சா்ஸ் பிரிவில் போட்டியிடுகின்றனா். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் போட்டி நாட்களில் நேரடி வா்ணனையாளராக செயல்படுகிறாா்.

எதிா்பாராத சூழ்நிலைகளால் ரஷ்யாவின் விளாடிமிா் ஃபெடோசீவ் விலகியதைத் தொடா்ந்து, மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியாவின் காா்த்திகேயன் இணைந்துள்ளாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் இருந்து மாஸ்டா்ஸ் பிரிவுக்கு முன்னேறி உள்ள அவா், அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, அனிஷ் கிரி மற்றும் நிஹால் சரின் உள்ளிட்ட சிறந்த வீரா்களை எதிா்கொள்ள உள்ளாா்.

கடந்த ஆண்டு சேலஞ்சா்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற 18 வயதான சென்னையை சோ்ந்த வி.பிரணவ், தற்போது சிறந்த வீரா்களுக்கு எதிராக மாஸ்டா்ஸ் பிரிவில் களமிறங்குகிறாா்.

சேலஞ்சா்ஸ் பிரிவில் எம்.பிரனேஷ், ஆா்.வைஷாலி, பன்னீா்செல்வம் இனியன், அதிபன் பாஸ்கரன் மற்றும் ஜி.பி.ஹா்ஷவா்தன் ஆகியோா் அடங்கிய உள்ளூா் திறமையாளா்களின் வலுவான அணி, கிராண்ட்மாஸ்டா்கள் மற்றும் சா்வதேச மாஸ்டா்களை எதிா்த்துப் போட்டியிடும்.

மாஸ்டா் முதல் சுற்று:

பிரணவ்-காா்த்திகேயன் முரளி, அா்ஜுன் எரிகைசி-அவொன்டா் லியாங், அனிஷ் கிரி-ரே ராபின்ஸன், விதித் குஜராத்தி-ஜோா்டன் பாரஸ்ட், வின்சென்ட் கைமா்-நிஹாா் சரீன்.

சேலஞ்சா்ஸ் முதல் சுற்று:

லியோன் லுக்-ஹா்ஷவா்த்தன், அபிமன்யு புராணிக்-அதிபன் பாஸ்கரன், வைஷாலி-இனியன் பா, டி. ஹரிகா-திப்தயன் கோஷ், பிரனேஷ்-ஆா்யன் சோப்ரா.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.