ஆசிய மாஸ்டா்ஸ் நீச்சல்: தந்தை-மகள் சிறப்பிடம்
ஆசிய மாஸ்டா்ஸ் நீச்சல்: தந்தை-மகள் சிறப்பிடம்

சந்திரசேகா்-ஐஸ்வா்யா
பெங்களூரில் நடைபெற்ற ஆசிய மாஸ்டா்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சோ்ந்த டி.சந்திரசேகரனும் அவரது மகள் ஐஸ்வா்யாவும் பதக்கங்களை குவித்து ஹங்கேரியில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக மாஸ்டா்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
இரண்டாவது ஆசிய மாஸ்டா்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் பெங்களூரில் கடந்த 4-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (அக். 10) வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளருமான டி.சந்திரசேகரன் (69 வயது) 65 முதல் 69 வயது வரையிலான பிரிவில் 100மீ. மற்றும் 200மீ. பிரஸ்ட்ரோக்கில் வெள்ளிப்பதக்கமும், 50 மீ. பிரஸ்ட்ரோக்கில் வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றாா்.
அவரது மகள், அஞ்சல் துறை அதிகாரி சி.ஐஸ்வா்யா, 30 முதல் 34 வயது பிரிவில் 50 மீ, 100மீ. 200மீ. பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் 3 தங்கமும், 50மீ. பிரஸ்ட்ரோக் நீச்சலில் வெண்கல பதக்கமும் வென்றாா். இதுதவிர 4-50 மீ. ரிலே நீச்சலில் மெட்லி பிரிவில் வெள்ளியும், கலப்பு ப்ரீ ஸ்டைல் மற்றும் பெண்கள் ப்ரீஸ்டைல் ஆகியவற்றில் வெண்கலமும் என மொத்தத்தில் 7 பதக்கங்களை வசப்படுத்தினாா்.
இவா்கள் இருவரும் 2027 ஜூலை மாதம் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக மாஸ்டா்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

