
கார் விபத்தில் மறைந்த லிவர்பூல் வீரர் தியாகோ ஜோடாவுக்கு முகமது சாலா மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா (28), அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த பிரீமியர் லீக் போட்டிகள் இன்று (ஆக.16) அதிகாலை முதல் தொடங்கின.
இதில் முதல் போட்டியாக லிவர்பூல் அணியும் ஏஎஃப்சி போர்ன்மவுத் அணியும் அன்பீல்டு திடலில் மோதின.
இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 4-2 என வென்றது. இந்தப் போட்டியில் முகமது சாலா 90+4-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
கோல் அடித்தும் தியாகோ ஜோடா பாணியில் சாலா கொண்டாடினார்.
கடைசியில், ஜோடாவின் மறைவுக்கு பாடல் இசைக்கப்பட்டபோது சாலா மிகவும் உடைந்து அழத் தொடங்கினார்.
திடலில் கடைசி நபராக இருந்து அழுதுகொண்டே வெளியேறினார்.
இந்தக் காட்சிகள் லிவர்பூல் மட்டுமில்லாமல் இந்திய கால்பந்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.