பிரீமியர் லீக்கில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய முகமது சாலா!

முகமது சாலா நிகழ்த்திய சாதனை குறித்து...
Mohamed Salah celebrates after scoring a goal...
கோல் அடித்த மகிழ்ச்சியில் முகமது சாலா... படம்: எக்ஸ் / லிவர்பூல் எஃப்சி
Published on
Updated on
1 min read

பிரீமியர் லீக்கில் லிவர்பூல் எஃப்சியின் வீரர் முகமது சாலா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த பிரீமியர் லீக் போட்டிகள் இன்று (ஆக.16) அதிகாலை முதல் தொடங்கின.

இதில் முதல் போட்டியாக லிவர்பூல் அணியும் ஏஎஃப்சி போர்ன்மவுத் அணியும் அன்பீல்டு திடலில் மோதின.

இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 4-2 என வென்றது. இந்தப் போட்டியில் முகமது சாலா 90+4-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

பிரிமீயர் லீக் வரலாற்றில் முதல் போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முகமது சாலா முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக 4 வீரர்கள் 8 கோல்கள் அடித்திருந்தார்கள். சாலா முதல்முறையாக இதில் இரட்டை இலக்க எண்ணை (10 கோல்கள்) அடைந்துள்ளார்.

பிரீமியர் லீக்கில் சாலாவின் 187-ஆவது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் பாலஸ்தீன பீலே கொலைக்கு சாலாவின் கண்டனத்துக்குப் பிறகு யுஇஎஃப்ஏ குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என பதாகையை சூப்பர் கோப்பை இறுதியில் வைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரீமியர் லீக்கில் முதல்நாளில் அதிக கோல்கள் அடித்தவர்கள்

  • முகமது சாலா -10 கோல்கள்

  • வெய்ன் ரூனி - 8 கோல்கள்

  • ஆலன் ஷெரர் - 8 கோல்கள்

  • பிராங்க் லாம்பார்டு - 8 கோல்கள்

Summary

Liverpool FC player Mohamed Salah has achieved a historic feat in the Premier League.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com