
லிவர்பூல் கால்பந்து அணி வீரர் 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
பிரீமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் கால் அணியும் நியூகேஸ்டல் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 35,46-ஆவது நிமிஷங்களில் லிவர்பூல் அணியினர் கோல் அடிக்க, இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த நியூகேஸ்டல் அணியினர் 57,88-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினர்.
பின்னர், 96-ஆவது நிமிஷத்தில் மாற்றுவீரராக வந்த 16 வயதேயான லிவர்பூல் வீரர் ரியோ குமோகா 100-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் லிவர்பூல் அணி 3-2 என வென்றது. நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணி புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்துள்ளது.
ரியோ குமோகாவுக்கு 16 ஆண்டுகள் 361 நாட்கள் ஆகின்றன. பிரீமியர் லீக் வரலாற்றில் 4-ஆவது இளம் வீரராகவும் லிவர்பூல் அணியில் முதல் வீரராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.