FIFA World Cup trophy is displayed during the draw for the 2026 soccer World Cup at the Kennedy Center in Washington, Friday,
2026 கால்பந்து உலகக் கோப்பை. படம்: ஏபி

2026 கால்பந்து உலகக் கோப்பை அட்டவணை: முதல் போட்டியில் ஆர்ஜென்டீனா - அல்ஜீரியா மோதல்!

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் 2026-க்கான அட்டவணை குறித்து...
Published on

ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

12 குழுக்களாக (குரூப் ஏ முதல் குரூப் எல் வரை) பிரிக்கப்பட்டிருக்கும் இந்த அணிகளில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீன அணியும் அல்ஜீரிய அணியும் மோதுகின்றன.

27 மாதங்களாக நடைபெற்றுவரும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இதுவரை 42 அணிகள் தேர்வாகியுள்ளன. மீதமுள்ள 6 அணிகள் ஃபிளே -ஆப்ஸ் மூலமாக தேர்வாகும்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று வெளியாகியுள்ளது.

48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

அடுத்தாண்டு ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கும் இந்தப் போட்டிகள் ஜூலை 19ஆம் தேதி முடிவடைகின்றன.

உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஃபிஃபா தலைவர் அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான விருதையும் வழங்கி கௌரவித்தார்.

குரூப் ஏ

மெக்சிகோ

தென்னாப்பிரிக்கா

தென்கொரியா

பிளே-ஆஃப் டி வெற்றியாளர்

குரூப் பி

கனடா

பிளே-ஆஃப் ஏ வெற்றியாளர்

கத்தார்

ஸ்விட்சர்லாந்து

குரூப் சி

பிரேசில்

மொராக்கோ

ஹைதி

ஸ்காட்லாந்து

குரூப் டி

அமெரிக்கா

பராகுவே

ஆஸ்திரேலியா

பிளே-ஆஃப் சி வெற்றியாளர்

குரூப் இ

ஜெர்மனி

குராசியோ

ஐவரி கோஸ்ட்

ஈக்குவாடர்

குரூப் எஃப்

நெதர்லாந்து

ஜப்பான்

பிளே-ஆஃப் பி வெற்றியாளர்

துனிசியா

குரூப் ஜி

பெல்ஜியம்

எகிப்து

ஈரான்

நியூசிலாந்து

குரூப் எச்

ஸ்பெயின்

கேப் வெர்டே

சௌதி அரேபியா

உருகுவே

குரூப் ஐ

பிரான்ஸ்

செனகல்

பிளே-ஆஃப் 2 வெற்றியாளர்

நார்வே

குரூப் ஜே

ஆர்ஜென்டீனா

அல்ஜீரியா

ஆஸ்திரியா

ஜோர்டான்

குரூப் கே

போர்ச்சுகல்

பிளே-ஆஃப் 1 வெற்றியாளர்

உஸ்பெகிஸ்தான்

கொலம்பியா

குரூப் எல்

இங்கிலாந்து

குரோசியா

கானா

பனாமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com