

பாகிஸ்தானில் நேஷன்ஸ் கேம்ஸ் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் இரு அணிகளுக்கும் மோதல் வெடித்தது.
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்படுமென பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் கூறியுள்ளது.
கராச்சியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஆர்மி அணியும் டபிள்யூஏபிடிஏ அணியும் மோதின.
மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 4-3 என பாகிஸ்தான் ஆர்மி அணி வென்றது.
இறுதி விசில் அடிக்கப்பட்டதும் இரு அணி வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ரசித்து பார்த்தமாதிரியான விடியோக்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டன.
இது குறித்து பாகிஸ்தான் ஒலிம்பிக் அசோசியேஷன் கூறியதாவது:
இந்தச் சண்டைக்கும் காரணமான அல்லது சண்டையைத் தொடங்கிய வீரர்கள் மீது எங்களது தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
தவறு உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மற்ற வீரர்கள், நடுவர்கள் தலையிட்டு காப்பாற்றும்வரை சில டபிள்யூஏபிடிஏ அணி வீரர்கள் போட்டியின் நடுவரை அவரது அறை வரைக்கும் துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள்.
நடுவரின் பெனால்டி குறித்து தீர்ப்பினால் வாப்டா அணியினர் அதிருப்தி அடைந்ததால் இந்தமாதிரி நடந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.