பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குளோபல் செஸ் லீக் கோப்பை அறிமுகம்

டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக் போட்டியின் கோப்பை அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது.

News image
கோப்பை அறிமுக விழாவில் பங்கேற்றோா்.
Updated On :13 டிசம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக் போட்டியின் கோப்பை அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது.

டெக் மஹிந்திரா, சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் குளோபல் செஸ் லீக் போட்டி மும்பையில் சீசன் 3 நடைபெறவுள்ளது.

மொத்தம் 9 நாள்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் தலைசிறந்த செஸ் வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். இதற்கான கோப்பை அறிமுக விழாவில் மஹிந்திரா குழுத் தலைவா் ஆனந்த் மஹிந்திரா, செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், அா்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகா துரோணவல்லி, வோலோடோா் அலிரெஸா பிரௌஸா ஆகியோா் பங்கேற்றனா்.

நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், கேஞ்சஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ், அமெரிக்கன் கேம்பிட்ஸ், யுபி கிராட் மும்பா மாஸ்டா்ஸ், அலாஸ்கன் நைட்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.