

பிரீமியர் லீக் வரலாற்றில் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒரே ஒரு அணிக்காக அதிக கோல் பங்களிப்புகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி பிரிங்டன் அணியுடனான போட்டியில் 2-0 என வென்றது.
இந்தப் போட்டியில் 1, 60ஆவது நிமிஷங்களில் ஹியூகோ ஹெகிடிகே கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் 26-ஆவது நிமிஷத்தில் முகமது சாலா சப்ஸ்டியூட்டாக ஆடத்தில் சேர்க்கப்பட்டார். 60-ஆவது நிமிஷத்தில் இவர் செய்த அசிஸ்ட் மூலமாகத்தான் கோல் அடிக்கப்பட்டது.
இதன்மூலம் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே ஒரே அணிக்காக அதிக கோல் பங்களிப்பில் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரீமியர் லீக்: ஒரே அணிக்காக அதிக கோல் பங்களிப்பு
முகமது சாலா - 277 (லிவர்பூல்) Mohamed Salah, Liverpool – 277
வெயின் ரூனி - 276 (மான்செஸ்டர் யுனைடெட்)
ரியான் கிக்ஸ் - 271 (மான்செஸ்டர் யுனைடெட்)
ஹாரி கேன் - 259 (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்)
தியரி ஹென்றி - 249 (ஆர்செனல்)
பிராங்க் லம்பார்ட் - 237 (செல்ஸி)
செர்ஜியோ அகியூரோ - 231 (மான்செஸ்டர் சிட்டி)
ஸ்டீவன் ஜெர்ராட் - 212 (லிவர்பூல்)
சன் ஹியூங்-மின் - 198 (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்)
ஜேமி வர்டே - 193 (லெய்ஸ்டர் சிட்டி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.