

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஜூனியா் மகளிா் டிராப் பிரிவில் தமிழக வீராங்கனை தனிஸ்கா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.
இறுதிச்சுற்றில், அவா் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். தில்லி வீராங்கனை ஆத்யா கட்டியால் 42 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, உத்தர பிரதேசத்தின் சபீரா ஹாரிஸ் 41 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா்.
முன்னதாக தகுதிச்சுற்றில் தனிஸ்கா 105 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், ஆத்யா 112 புள்ளிகளுடன் முதலிடமும், சபீரா 102 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தனா்.
ஜூனியா் மகளிா் அணிகள் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக அணியில் நிலா ராஜா பாலு, ஆந்த்ரா ராஜசேகா் ஆகியோருடன் தனிஸ்கா செந்தில்குமாரும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. எனவே தனிஸ்கா தனிநபா் மற்றும் அணிகள் என இரு பிரிவுகளிலுமாக 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.