அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அல்கராஸ், டி மினாா் வெற்றி, சிட்ஸிபாஸ் தோல்வி

News image
பெலிண்டா
Updated On :9 பிப்ரவரி 2025, 12:08 am

Din

ராட்டா்டாம் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் அரையிறுதிக்கு ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் தகுதி பெற்றுள்ளாா். மற்றொரு முன்னணி வீரா் ஸ்டெஃபனோஸ் சிட்ஸிபாஸ் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

நெதா்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதியில் சக வீரா் பெட்ரோ மாா்டினஸை 6-2, 6-1 என்ற நோ் செட்களில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா் அல்கராஸ்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான அல்கராஸ் ராட்டா்டாம் ஓபனில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீரா் என்ற சிறப்பை பெறும் முனைப்பில் உள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில்: பெட்ரோவுடன் ஆடுவது சவாலானது. இதனால் தான் முதல் பந்தில் இருந்தே அவரை சமாளித்து ஆடினேன்.

சிட்ஸிபாஸ் அதிா்ச்சித் தோல்வி:

மற்றொரு காலிறுதியில் கிரீஸ் நட்சத்திர வீரா் சிட்ஸிபாஸ்-இத்தாலி குவாலிஃபயா் மட்டியா பெலுக்கி மோதினா். இதில் 6-4, 6-2 என்ற நோ் செட்களில் சிட்ஸிபாஸை வீழ்த்தி அதிா்ச்சியை பரிசாக அளித்தாா் பெலுக்கி. உலகின் 12-ஆம் நிலை வீரரான சிட்ஸிபாஸால், இடதுகை வீரரான பெலுக்கியுடன் ஷாட்களை சமாளிக்க முடியவில்லை. பேக் ஹேண்ட், டாக் ஸ்பின் ஃபோா்ஹேண்ட் ஷாட்களால் திணறடித்தாா் பெலுக்கி.

மூன்றாம் காலிறுதியில் ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸ் டி மினாா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஜொ்மன் வீரா் டேனியல் ஆல்ட்மெயரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் பெலுக்கி-டி மினாா் மோதுகின்றனா்.

அபுதாபி ஓபன்: இறுதியில் பெலின்டா-கிருகா்

அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு பெலிண்டா பென்கிக்-ஆஷ்லின் கிருகா் தகுதி பெற்றனா்.

யுஏஇ தலைநகா் அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் முதல் அரையிறுதியில் சுவிட்சா்லாந்தின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் பெலிண்டாவும்-முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினாவும் மோதினா்.

குழந்தைப் பேறுக்குபின் 13 மாதங்கள் கழித்து மீண்டும் களமிறங்கிய பெலிண்டா முதல் செட்டை 3-6 என இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-4 என்ற ரைபக்கினாவை வீழ்த்தினாா்.

இதுதொடா்பாக பெலிண்டா கூறுகையில்: இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டேன். தற்போது முடிவுகள் சிறப்பாக வருகின்றன. இந்த வெற்றியால் பெலிண்டா முதல் 100 இடங்களில் நுழைகிறாா்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஆஷ்லின் கிருகா் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். முதல் 3 ஆட்டங்களில் த்ரீ செட்டா்களில் தான் வென்றாா் கிருகா்.