காலிறுதியல்ல, இறுதிப்போட்டி போலிருந்தது..! ஜோகோவிச் நெகிழ்ச்சி!

ஆஸி. ஓபன் காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
ஜோகோவிச் - அல்கராஸ்.
ஜோகோவிச் - அல்கராஸ். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸி. ஓபன் காலிறுதிப் போட்டியில் அல்கராஸை வீழ்த்தியது குறித்து நோவக் ஜோகோவிச் இது இறுதிப் போட்டியாக இருந்திருக்க வேண்டுமென நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

3 மணி நேரம் 37 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 3-1 என்ற செட்களில் அபாரமாக வென்றார்.

8 ஆட்டங்களில் ஜோகோவிச் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் ஆஸ்திரேலிய ஓபனில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

21 வயதான அல்கராஸ் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு நோவக் ஜோகோவிச் பேசியதாவது:

இறுதிப் போட்டியாக இருந்திருக்க வேண்டும்

அவருடைய தற்போது டென்னிஸ் வாழ்க்கையில் அவர் சாதித்தது எல்லாம் குறித்து கார்லோஸ் அல்கராஸ் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

அல்கராஸ் மிகவும் நல்ல வீரர், சிறந்த போட்டியாளர். இளம் வயதிலேயே உலகத்தின் நம்.1 வீரராகி அசத்தியுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார். நிச்சயமாக இன்னும் அதிகமாக வெல்லுவார்.

என்னைவிடவும் நீண்டகாலமாக டென்னிஸ் வாழ்க்கையில் நீடித்து நிற்பார். உண்மையிலேயே இந்தப் போட்டி இறுதிப் போட்டியாக இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

இந்த ஆடுகளத்தில் மட்டுமல்ல எந்த ஆடுகளத்திலும் நான் ஆடியதிலேயே மிகச்சிறந்த போட்டி இதுவாக இருக்கிறது என்றார்.

2023இல் சின்சினாட்டி இறுதிப் போட்டியில் 3 மணி நேரம் 49 நிமிஷ போட்டி உள்பட அனைத்து 3 கடின தரைப் போட்டிகளிலும் ஜோகோவிச் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com