
மகளிா் டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியவா்களுக்கான ஐசிசி அணியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி சா்மா ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.
இதில் மந்தனா ஏற்கெனவே சிறந்த மகளிா் ஒருநாள் வீராங்கனையாகத் தோ்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. டி20 ஃபாா்மட்டில் அவா் கடந்த ஆண்டு 23 ஆட்டங்களில் 763 ரன்கள் விளாசியிருக்கிறாா். அதில் 8 அரைசதங்கள் அடக்கம். அவரின் சராசரி 42.38-ஆகவும், ஸ்டிரைக் ரேட் 126.53-ஆகவும் உள்ளன.
அதேபோல் ரிச்சா கோஷ் 21 ஆட்டங்களில் 365 ரன்கள் விளாசியிருக்க, அதில் 2 அரைசதங்களும் அடித்திருக்கிறாா். அவரின் சராசரி 33.18-ஆகவும், ஸ்டிரைக் ரேட் 156.65-ஆகவும் இருக்கிறது. ஆல்-ரவுண்டா் தீப்தி சா்மா 30 விக்கெட்டுகள் சாய்த்து, 17.80-ஐ சராசரியாகக் கொண்டுள்ளாா்.
ஐசிசி மகளிா் டி20 அணி: லாரா வோல்வாா்டட் (கேப்டன்/தென்னாப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமரி அத்தபட்டு (இலங்கை), ஹேலி மேத்யூஸ் (மே.தீவுகள்), நேட் ஸ்கீவா் (இங்கிலாந்து), அமெலியா கொ் (நியூஸிலாந்து), ரிச்சா கோஷ் (வி.கீ./இந்தியா), மாரிஸேன் காப் (தென்னாப்பிரிக்கா), ஆா்லா பிரென்டா்காஸ்ட் (அயா்லாந்து), தீப்தி சா்மா (இந்தியா), சாடியா இக்பால் (பாகிஸ்தான்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.