
பிரபல கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் சன்டோஷ் எஃப்சி கிளப்பிலிருந்து விலகி பிரான்ஸின் புகழ்ப்பெற்ற லீக் 1 தொடரில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் (33 வயது) சமீபத்தில் சௌதி கிளப்பில் இருந்து விலகி தனது சிறுவயது அணியான சன்டோஷ் எஃப்சி கிளப்பில் விளையாடி வருகிறார்.
இந்தக் கிளப்பில் வரும் டிசம்பர் வரை அவருக்கு ஒப்பந்தம் இருக்கும் நிலையில், சமீபத்தில் நெய்மருக்கு அந்த அணியின் ரசிகருடன் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கிளப்பிலிருந்து விலகுவதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் புகழ்ப்பெற்ற லீக் 1 தொடரில் ஒலிம்பிக் டி மார்சேய் அணியில் நெய்மர் இணைய பேச்சு வார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
பிஎஸ்ஜி அணியின் பரம எதிரியாக ஒலிம்பிக் டி மார்சேய் கருதப்படுவதும் கவனிக்கத்தக்கது.
முன்னதாக நெய்மர் பிஎஸ்ஜி அணியில் 2017–2023 வரை விளையாடியுள்ளதால், இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நெய்மர் தற்போதுதான் 2-3 போட்டிகளில் முழுமையான 90 நிமிடத்தையும் விளையாடி வருகிறார்.
உலகக் கோப்பை 2026-இல் பிரேசில் அணிக்காக விளையாடுவதுதான் அவரது முதன்மையாக நோக்கமாக இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.