மெஸ்ஸிக்கான சிறப்பு போஸ்டர்.
மெஸ்ஸிக்கான சிறப்பு போஸ்டர். படம்: எம்எல்எஸ்

ஜூலை மாதத்தின் சிறந்த வீரர்..! விருதுகளைக் குவிக்கும் மெஸ்ஸி!

எம்எல்எஸ் தொடரில் பல விருதுகளை குவிக்கும் மெஸ்ஸி குறித்து...
Published on

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி பல விருதுகளை குவித்து வருகிறார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார்.

கடைசி போட்டியில் மெஸ்ஸி விளையாட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இன்றைய போட்டியில் மெஸ்ஸி கலந்துகொண்டார்.

இன்று அதிகாலை நடந்த இந்தப் போட்டியில் அட்லஸ் அணியுடன் இன்டர் மியாமி அணி மோதியது. இதில் 2-1 என மியாமி வென்றது.

இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், 3 மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக்கியது என மெஸ்ஸி அசத்தலாக விளையாடினார்.

இந்தச் சிறப்பான ஆட்டத்துக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார். அத்துடன் இந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருதையும் பெற்றுள்ளார்.

கடந்த முறையும் மெஸ்ஸி இந்த விருதை வென்றிருந்தார். இந்தாண்டில் 18 போட்டிகளில் 18 கோல்கள், 7அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.

Player of the Month. Again. Just Messi things.
மெஸ்ஸிக்கான சிறப்பு போஸ்டர். படம்: எம்எல்எஸ்

இந்த விருது இந்த மாதத்தில் 5 போட்டிகளில் 8 கோல்கள், 3 அசிஸ்ட்டுகளை செய்ததிற்காக கொடுக்கப்பட்டதென எம்எல்எஸ் தெரிவித்துள்ளது.

Summary

Lionel Messi has been collecting many awards in the MLS series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com