கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்திய கூடைப்பந்து லீக் தொடக்கம்!

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது.

News image
Updated On :6 ஜூன் 2025, 7:57 pm

Din

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏசிஜி ஸ்போா்ட்ஸ் பி லிட், பிஎஃப்ஐ இணைந்து, நடத்தவுள்ள இந்த லீக் தொடா் ஆடவா் 5*5, மகளிா் 3*3 பிரிவுகளஇல் நடைபெறும்.

மேலும் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரா்கள் கூடைப்பந்து ஒரு சாத்தியமான தொழிலாகத் தொடர ஒரு விரிவான தொழில்முறை சூழலை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, முழுமையான விளையாட்டு வீரா் மேம்பாடு மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டைக் கொண்டு, உலக கூடைப்பந்து அரங்கில் இந்திய வீரா்கள் பங்கேற்க அடித்தளமாக அமையும்.

இந்திய கூடைப்பந்து லீக் தொடரின் இயக்குநராக, ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் முன்னாள் ஆணையா் ஜொ்மி லோலிகா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் ஒரு பகுதியாக உயா்செயல்திறன் கூடைப்பந்து பயிற்சி அகாதெமியும் அமைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலிய பயிற்சியாளா்கள் இதில் பயிற்சி தருவா். ஊட்டச்சத்து, மனநலன், கல்வி ஆகியவையும் அகாதெமியில் இடம் பெறும்.

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புத் தலைவா் ஆதவ் அா்ஜுனா கூறுகையில்: ஏசிஜி -பிஎஃப்ஐ இணைந்து இந்த லீக் தொடரை நடத்துவதால் ஏராளமான இளம் வீரா், வீராங்கனைகள் பயன்பெறுவா். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதே எங்கள் நோக்கம் என்றாா்.‘

பிஎஃப்ஐ பொதுச் செயலாளா் குல்விந்தா் சிங் கில், ஏசிஜி நிா்வாக இயக்குநா் கரண் சிங் உடனிருந்தனா்.