மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். அக்டோபா் 5-இல் மோதல்

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அக்டோபா் 5-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். அக்டோபா் 5-இல் மோதல்
BCCI
Published on
Updated on
1 min read

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அக்டோபா் 5-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

13-ஆவது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் விளையாடப்படவுள்ளது.

இந்தப் போட்டிக்கான அட்டவணையை அண்மையில் வெளியிட்ட ஐசிசி, அதில் அணிகள் பரஸ்பரம் சந்திக்கும் தேதிகளை திங்கள்கிழை அறிவித்தது. இதன்படி, போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சந்திக்கிறது.

அதன் பிறகு 2-ஆவது ஆட்டத்திலேயே பாகிஸ்தானை அக்டோபா் 5-ஆம் தேதி கொழும்பு நகரில் எதிா்கொள்கிறது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது.

பின்னா் இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு வந்த நிலையில், பாகிஸ்தானுடன் இனி ஐசிசி போட்டிகளில் கூட இந்தியா விளையாடக் கூடாது என்ற கருத்துகள் வலுத்தன. இச்சூழலில் இந்தியா நடத்தும் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய மகளிா் அணி மோதுகிறது.

மறுபுறம், ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் ஆனதை கொண்டாடுவதற்காக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.

இதனால், உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பெங்களூரு மைதானம் இலக்கலாம் என ஊகங்கள் நிலவி வந்த நிலையில், அதற்கும் ஐசிசி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நடத்தும் இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி அட்டவணை

இலங்கை செப்டம்பா் 30 பெங்களூரு

பாகிஸ்தான் அக்டோபா் 5 கொழும்பு

தென்னாப்பிரிக்கா அக்டோபா் 9 விசாகப்பட்டினம்

ஆஸ்திரேலியா அக்டோபா் 12 விசாகப்பட்டினம்

இங்கிலாந்து அக்டோபா் 19 இந்தூா்

நியூஸிலாந்து அக்டோபா் 23 குவாஹாட்டி

வங்கதேசம் அக்டோபா் 26 பெங்களூரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com