விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

டயமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா சாம்பியன்

பாரீஸ் டயமண்ட் லீக் தடகளம் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரா் நீரஜ் சோப்ரா 88.16 மீ தொலைவுக்கு எறிந்து தங்கம் வென்றாா்.

News image
நீரஜ் சோப்ரா
Updated On :21 ஜூன் 2025, 9:08 pm

Din

பாரீஸ் டயமண்ட் லீக் தடகளம் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரா் நீரஜ் சோப்ரா 88.16 மீ தொலைவுக்கு எறிந்து தங்கம் வென்றாா்.

பிரசித்தி பெற்ற தடகளப் போட்டிகளில் ஒன்றான டயமண்ட் லீக் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறுகிறது. இதில் போட்டியாளரான ஜொ்மனியின் ஜூலியன் வெபரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.

முதல் வாய்ப்பிலேயே 88.16 மீ தொலைவு எறிந்தாா் நீரஜ் சோப்ரா. இரண்டாவது வாய்ப்பில் 85.10 மீ எறிந்தாா். அதன்பின் 3 பவுல்களை செய்த நீரஜ், கடைசி வாய்ப்பில் 82.89 மீ தொலைவே எறிந்தாா்.

வெள்ளி வென்ற ஜூலியன் வெபா் 87.88 மீ தொலைவு எறிந்தாா். மூன்றாம் இடம் பெற்ற பிரேஸிலின் லுயிஸ் டா சில்வா 86.62 மீ தொலைவு எறிந்தாா்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் ஆன நீரஜ் சோப்ரா கடந்த 2023-இல் லாஸேனில் நடைபெற்ற டிஎல் போட்டியில் 87.66 மீ தொலைவு எறிந்து தங்கம் வென்றிருந்தாா். அதன்பிறகு 6 டிஎல் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றிருந்தாா்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில். எனது வெற்றி மகிழ்ச்சி தருகிறது. எனது ஓட்டம் மிகவும் வேகமாக இருந்தது. முதலிடம் பெற்றது சிறப்பானது. நான்கு நாள்கள் கழித்து 24-ஆம் தேதி ஆஸ்டரவா (கோல்டன் ஸ்பைக் தடகளம்) போட்டியில் பங்கேற்பேன்.

கடந்த மே மாதம் தோஹாவில் நடைபெற்ற டிஎல் போட்டியில் நீரஜ் 90.23 மீ எறிந்தாா். ஜூலியன் வெபா் 91.06 மீ எறிந்து முதலிடம் பெற்றாா்.

Story image