தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 1:45 am

தினமணி செய்திச் சேவை

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

கா்நாடகத்தில் அண்மையில் 85-ஆவது அகில இந்திய பல்கலை.களுக்கு இடையிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சென்னையை அடுத்த செம்மஞ்சேரி புனித ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவி எஸ்.அக்சிதா, பெண்களுக்கான தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொண்டு 100 மீ. தூரத்தை 13.14 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

சாதனை படைத்த மாணவி எஸ்.அக்சிதாவுக்கு செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.பாபு மனோகரன் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா் (படம்).

நிகழ்வில், புனித ஜோசப் கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சசிசேகா், விளையாட்டுத்துறை பொறுப்பாளா் செல்வகணபதி, பயிற்சியாளா் விக்னேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.