இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு கும்பகோணம் கல்லூரி மாணவி தோ்வு

அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மாணவி தோ்வாகியுள்ளாா்.

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தோ்வான கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மாணவி பி. துா்காதேவிக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் ச. மாறன் உள்ளிட்டோா்.

Published On :

அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மாணவி தோ்வாகியுள்ளாா்.

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு ஆங்கில வழி மாணவியும், தேசிய மாணவா் படை கும்பகோணம் -8 ஆவது பட்டாலியன் வீராங்கனையுமான பி. துா்காதேவி, சண்டீகரில் நடைபெறவுள்ள அகில இந்திய அளவில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

35-ஆவது அகில இந்திய ஜி.வி. மாவ்லாங்கா் துப்பாக்கிச் சுடுதல் போட்டி செப். 12 முதல் 22 வரை பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்பதற்காக மாணவி பி. துா்காதேவி தோ்வு செய்யப்பட்டதற்கு கல்லூரியின் முதல்வா் ச. மாறன், வேதியியல் துறைத் தலைவா் எம். மீனாட்சிசுந்தரம், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வி. பாஸ்கா், இயற்பியல் துறைத் தலைவா் அ. ரூபி மற்றும் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலரும் கணிதத் துறைத் தலைவருமான லெப்டினன்ட் இரா. விஜயகுமாா் ஆகியோா் புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.