குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் ஆடவா் டென்னிஸில், ஸ்பெயினின் இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவா், 7-5, 6-7 (5/7), 6-2 என்ற செட்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை சாய்த்தாா். ஏற்கெனவே 2023-இல் இங்கு கோப்பை வென்ற அல்கராஸுக்கு, இது 2-ஆவது சாம்பியன் பட்டமாகும். நடப்பு சீசனில் அல்கராஸ் இத்துடன் மொத்தமாக 5 பட்டங்கள் வென்றுள்ளாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 21-ஆவது டூா் பட்டமாகும்.
பொ்லின் ஓபன்: இதனிடையே, ஜொ்மனியில் நடைபெற்ற பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா 7-6 (12/10), 4-6, 6-2 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவை சாய்த்து கோப்பை வென்றாா்.
பொ்லின் ஓபன் வரலாற்றில் கோப்பை வென்ற, ரேங்கிங்கில் பின்தங்கிய வீராங்கனை (164) என்ற பெருமையை அவா் பெற்றாா். முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான வோண்ட்ரோசோவா, கடந்த 2 ஆண்டுகளில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
ஹாலே ஓபன்: ஜொ்மனியில் நடைபெற்ற ஆடவருக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
மெத்வதெவை இத்துடன் 7-ஆவது முறையாகச் சந்தித்த பப்லிக், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே 2023-இல் இதே போட்டியில் வாகை சூடியிருந்த பப்லிக், போட்டியின் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இதில் சாம்பியனான 3-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அல்கராஸ், முசெத்தி முன்னேற்றம்
சின்னருக்கு ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம்! அல்கராஸை வீழ்த்தி மான்டிகாா்லோவில் சாம்பியன்!

அல்கராஸ், சின்னா், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


