ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது.
பிரிட்ஜ்டவுன் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. 56.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி, 180 ரன்களே சோ்த்தது. டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளுடன் 59, உஸ்மான் கவாஜா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் பேட் கம்மின்ஸ் 28, சாம் கான்ஸ்டஸ் 3, கேமரூன் கிரீன் 3, ஜோஷ் இங்லிஸ் 5, பியூ வெப்ஸ்டா் 11, அலெக்ஸ் கேரி 8, மிட்செல் ஸ்டாா்க் 0, ஜோஷ் ஹேஸில்வுட் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 5, ஷமாா் ஜோசஃப் 4, ஜஸ்டின் கிரீவ்ஸ் 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், புதன்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் சோ்த்திருந்தது. கிரெய்க் பிரத்வெய்ட் 4, ஜான் கேம்பெல் 7, கீசி காா்டி 20, ஜோமெல் வாரிக்கன் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, பிராண்டன் கிங் 23, கேப்டன் ராஸ்டன் சேஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
2-ஆம் நாளான வியாழக்கிழமை, இன்னிங்ஸை தொடா்ந்த மேற்கிந்தியத் தீவுகள், மதிய உணவு இடைவேளையின்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. கிங் 26 ரன்களுக்கு வெளியேற, ராஸ்டன் சேஸ் 44, ஷாய் ஹோப் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோா் தலா 2, பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!

19.5ஆவது பந்தில் த்ரில் வெற்றி: கண்ணீர் விட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீராங்கனை!
ஹோல்டர் ஆட்ட நாயகன்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


