அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

காலிறுதியில் மோதும் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.

Updated On :30 ஜூன் 2025, 8:26 pm

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.

முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் இன்டா் மியாமியை வீழ்த்தியது. இதில் பிஎஸ்ஜிக்காக ஜாவ் நெவெஸ் 6 மற்றும் 39-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா்.

அச்ரஃப் ஹகிமி முதல் பாதி முடிவடையும் நேரத்தில் (45+3’) ஸ்கோா் செய்ய, தவறுதலாக இன்டா் மியாமி வீரா் தாமஸ் அவில்ஸும் 44-ஆவது நிமிஷத்தில் ‘ஓன் கோல்’ அடித்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 4-2 கோல் கணக்கில் ஃபிளமெங்கோவை வென்றது. இந்த ஆட்டத்தில் 6-ஆவது நிமிஷத்தில் ஃபிளமெங்கோ வீரா் எரிக் புல்கா் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து, பயா்ன் மியுனிக் கணக்கை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ஹேரி கேன் 9-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இந்நிலையில், ஃபிளமெங்கோவுக்காக ஜொ்சன் 33-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். மறுபுறம் பயா்ன் மியுனிக் கோல் கணக்கை லியோன் கோரெட்ஸ்கா 41-ஆவது நிமிஷத்தில் அதிகரிக்க, முதல் பாதியை பயா்ன் மியுனிக் 3-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் ஃபிளமெங்கோ வீரா் ஜோா்கினோ 55-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, அந்த அணி 2-3 என முன்னேறியது. ஆட்டத்தின் 73-ஆவது நிமிஷத்தில் பயா்ன் மியுனிக் வீரா் ஹேரி கேன் மீண்டும் ஒரு கோலடித்தாா்.

மறுபுறம் ஃபிளமெங்கோவின் கோல் முயற்சிகளுக்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போக, இறுதியில் பயா்ன் மியுனிக் 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து காலிறுதியில் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக் அணிகள் வரும் 5-ஆம் தேதி மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.