ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!

1 லட்சம் இருக்கைகளுடன் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து திடல்..
ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து திடம் அமையவுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான திட்டங்களை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வெளியிட்டுள்ளது. இது இங்கிலாந்தில் ஏற்கனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க; 15 சிக்ஸர்கள்.. 28 பந்துகளில் அதிவேக சதம்! மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஏலியன்

116 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஓல்ட் டிராஃபோர்டை மறுவடிவமைப்பதா என்பதை மான்செஸ்டர் யுனைடெட் முன்னதாக ஆராய்ந்து வந்தது. ஆனால் இப்போது பழைய மைதானத்திற்கு பதிலாக புதிய மைதானத்தை கட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அமைக்கப்படவுள்ள புதிய மைதானம் உலகின் மிகச்சிறந்த கால்பந்து மைதானமாக இருக்கும் என்று மைதானத்தின் இணை உரிமையாளர் ஜிம் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய மைதான கட்டுமானத்தின்போது மான்செஸ்டர் வீரர்கள் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்திலேயே விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதான கட்டுமானத்துக்கு மொத்தமாக 2 பில்லியன் யூரோ வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மைதான கட்டுமான பணியில் சுமார் 92,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க; க்ளென் பிலிப்ஸ்தான் சிறந்த ஃபீல்டர்..! ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com