
ஜமைக்கா அணியை 2-0 என வீழ்த்தி இன்டர் மியாமி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிளப்புகளுக்காக நடைபெறும் கால்பந்து போட்டிகள் கான்காகாஃப் (CONCACAF) என்ற பெயரில் நடைபெறுகின்றன.
ஜமைக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி கவாலியர் அணியை 2-0 என வெற்றி பெற்றது. இதில் லூயிஸ் சௌரேஜ் 37ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.
கடந்த போட்டியில் விளையாடாத மெஸ்ஸி 90+2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
கடந்த சுற்றில் 2-0 என இன்டர் மியாமி வெற்றி பெற மொத்தமாக 4-0 என ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அணியுடன் காலிறுதியிலி இன்டர் மியாமி அணி மோதும். முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற முயற்சிப்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்காமாக ஜமைக்காவில் 3,000 இருக்கைகள் உடனே போட்டிகள் நடைபெறும் தற்போது 35,000 இருக்கைகளாக உயர்த்தப்பட்டது.
ஜமைக்கா ரசிகர்கள் மெஸ்ஸியின் கோலை ரசித்து பார்த்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.