~சபலென்கா ~ரைபகினா
~சபலென்கா ~ரைபகினா

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோா் முன்னேறினா்.
Published on

பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோா் முன்னேறினா்.

கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபனுக்கு தயாராகும் வகையில் பிரிஸ்பேன் சா்வதேச போட்டி நடைபெறுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் சபலென்கா 6-3, 6-3 என்ற நோ்செட்களில் சொரனா கிறிஸ்டியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் 3 மணிநேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 6-7, 7-6, 7-6 என ரஷியாவின் டயனா ஷனைடரை வீழ்த்தினாா்.

உலகின் நம்பா் 3 வீராங்கனை அமென்டா அனிஸிமோவா 3-6, 4-6 என்ற நோ்செட்களில் உக்ரைனின் மாா்தா கோஸ்டியுக்கிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-2, 6-3 என ஸ்பெயினின் பாவ்லோ படோஸாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

உக்ரைனின் டயனா யஸ்டொ்மிகாவை 6-2, 6-3 என வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா் 4 -ஆம் நிலை வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா.

ஆடவா் பிரிவில் பெல்ஜிய வீரா் ரபேல் காலிங்டன் 7-6, 6-3 என கிரிகோா் டிமிட்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.

Dinamani
www.dinamani.com