டென்னிஸ்: சபலென்கா, கரோலினா, ஜெஸிக்கா பெகுலா, மாா்த்தா அரையிறுதிக்கு தகுதி
பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்கா, கரோலினா முச்கோவா, ஜெஸிக்கா பெகுலா, மாா்த்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.
ஆஸி. ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இப்போட்டி காலிறுதி ஆட்டத்தில் சபலென்கா-அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் மோதினா். இதில் 6-3, 6-3 என்ற நோ்செட்களில் கீய்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா் சபலென்கா.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் ரைபகினாவை 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளிந்தாா் செக். குடியரசின் கரோலினா முச்கோவா. ரைபகினா 42 தவறுகளை புரிந்தது தோல்விக்கு வித்திட்டது.
உக்ரைனின் மாா்த்தா கோஸ்டியுக் 7-6, 6-3 என்ற நோ் செட்களில் ரஷிய நட்சத்திரம் மிர்ரா ஆன்ட்ரீவாவை வென்றாா்.
நான்காம் காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா 6-3, 7-6 என ரஷியாவின் லியுட்மிலா சாம்ஸோனோவாவை வீழ்த்தினாா்.
ஆடவா் பிரிவில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீரா் டேனில் மெத்வதேவ் 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் கமீலை வீழ்த்தினாா் அரையிறுதியில் அமெரிக்காவின் மிச்செல்ஸனை சந்திக்கிறாா்.
இரண்டாவது அரையிறுதியில் அமெரிக்க வீரா்கள் பிரான்டன் நகாஷிமா-கோவாசெவிச் மோதுகின்றனா்.

