
கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான புதிய பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அணியின் சமீபத்திய ஃபார்ம் கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஆர்ஜென்டீனாவுடன் 4-1 என பிரேசில் தோல்வியுற்றது.
இதனைத் தொடர்ந்து பிரேசிலின் பயிற்சியாளர் டோரியல் ஜூனியருக்குப் பதிலாக ரியல் மாட்ரிட் அணியின் கார்லோ அன்செலாட்டி ஒப்பந்தமாகியுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியில் கடந்த 2021 ஆண்டு, ஜூன்.1ஆம் தேதி பயிற்சியாளராகச் சேர்ந்த கார்லோ அன்செலாட்டியின் ஒப்பந்தம் 2026 வரை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரேசிலுக்கு அடுத்ததாக ஜூன் 6, 11ஆம் தேதிகளில் ஈகுவாடர், பராகுவே அணிகளுடன் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் இருப்பது கவனிக்கத்தக்கது.
பிரேசில் அணியில் ரியல் மாட்ரிட் அணியில் கலக்கும் ஆண்டனி தேர்வாகியுள்ளார். பெரிதும் எதிர்பார்த்த நெய்மர் அணியில் தேர்வாகவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் காசெமிரோவும் மீண்டும் அணியில் தேர்வாகியுள்ளார்.
2026 உலகக் கோப்பையை வெல்ல பிரேசில் அணி கடுமையாக உழைத்து வருகிறது.
பிரேசில் அணி
கோல்கீப்பர்கள்: அலிசன் (லிவர்பூல்), பென்டோ (அல்-நசீர்), ஹியூகோ சௌஸா (கொரியாந்தீஸ்)
டிபெண்டர்கள்: அலெக்ஸ் சாண்ட்ரோ, டேனிலோ, லியோ ஆர்டிஸ், வெஸ்லி, அலெக்ஸாண்ட்ரோ, லுகாஸ் பெரால்டோ, கார்லோஸ் ஆகஸ்டோ, வண்டர்சன்.
மிட்ஃபீல்டர்கள்: ஆண்டிரியா பெரேரிரா, ஆண்ட்ரே சந்தோஷ், புரூனோ கிய்மாரிஸ், காசெமிரோ, ஈடர்சன்.
ஃபார்வேடுகள்: ஆண்டனி, எஸ்டெவாவோ, கேப்ரியல் மார்டினெல்லி, மாத்யூஸ் குன்ஹா, ரபீன்யா, ரிசார்லிசன், வினிசியஸ் ஜூனியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.