3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

3வது டி20 ஆட்டத்தில் ஆஸி. பேட்டிங் நிறைவடைந்துள்ளது...
tim david
சிக்ஸருக்கு விளாசும் டிம் டேவிட்jio hotstar
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸி. அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், டி20 போட்டிகள் துவங்கியுள்ளன.

முதல் ஆட்டம் மழையால் ரத்தாக, இரண்டாம் ஆட்டத்தில் ஆஸி. வென்றது. இன்று மூன்றாம் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளனர்.

அதிகபட்சமாக, அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 74 ரன்களும் ஸ்டாய்னிஸ் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அர்ஷதீப் சிங் 3 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களையும் எடுத்துள்ளனர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Summary

team australia scored 186 runs in 3 t20 againt india

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com