

உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து கிரிக்கெட் ரசிகை ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய மகளிரணி வென்று சாதனை படைத்தது. இது இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பை வெற்றியாகும். தென்னாப்பிரிக்காவும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத நிலையில், இம்முறை கடுமையாகப் போராடி தோல்வி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகை ஒருவர், இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து ஆவேசமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,
''இந்திய அணி சிறப்பாக விளையாடியது, உலகக்கோப்பை வெல்வதற்கு தகுதியான அணியாக செயல்பட்டது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்தது. இந்திய அணி வெற்றிபெற அவர்களுக்கு ஆதரவாக அரசு, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் இருந்தனர்.
சச்சின் டென்டுல்கர், ரோகித் சர்மா, விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற வீரர்கள் திடலில் இந்திய மகளிருக்கு ஆதரவாக இருந்தனர்.
ஆனால், தென்னாப்பிரிக்க மகளிர் அணியை ஊக்குவிக்க திடலில் ஒருவர் கூட இல்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டிவரை முன்னேற அவ்வளவு கடினமாக தென்னாப்பிரிக்க மகளிர் அணி உழைத்துள்ளது.
உலகக் கோப்பை வெல்ல கடும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு ஆதரவாக திடலில் ஒருவர் கூட இல்லை. ஒருவேளை தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்லாது என நினைத்தார்களோ? இதுதான் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் உள்ள வித்தியாசம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.