உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் குடியரசுத் தலைவர் சந்திப்பு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்திப்பு...
உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மகளிருக்கான 13 ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவ. 5) தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு இந்திய அணியினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், வீராங்கனைகள் அனைவரும் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் குடியரசுத் தலைவருக்கு பரிசளித்துள்ளார்.

இத்துடன், தாங்கள் வென்ற உலகக் கோப்பையையும் குடியரசுத் தலைவர் முர்முவிடம் கொடுத்து இந்திய அணியினர் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிக்க: ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!

Summary

President Draupadi Murmu has personally congratulated the Indian team for winning the Women's Cricket World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com