கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதமிருக்கும் தொகை தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
Published on

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதமிருக்கும் தொகை தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அணியின் உரிமையாளர்கள் நவம்பர் 15ஆம் தேதி தங்களது அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் இறுதிப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

சிஎஸ்கேவில் இணைந்த சஞ்சு சாம்சனின் உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு!

அதன்படி, சென்னை உள்பட 10 அணிகளும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐயிடம் இன்று சமர்ப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்ப மினி ஏலத்தில் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

அந்த வகையில் மினி ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளிடமும் எவ்வளவு தொகை மீதம் இருக்கிறது என்பது குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை அணியிடம் ரூ.2.75 கோடியும் உள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.43.40 கோடியும் உள்ளது.

எனவே, வரும் டிசம்பரில் நடக்கும் மினி ஏலத்தில் கொல்கத்தா, சென்னை அணிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே தக்கவைத்த, விடுவித்த வீரர்கள் விவரம்!

எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை- முழு விவரம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ. 43.40 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 2.75 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ. 16.40 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ. 64.30 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ. 25.50 கோடி), குஜராத் டைட்டன்ஸ் (ரூ. 12.90 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ. 16.05 கோடி), தில்லி கேபிடல்ஸ் (ரூ. 21.80 கோடி), லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 22.95 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ. 11.50 கோடி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com