மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2026 டி-20 உலகக் கோப்பை விளம்பர தூதர் ரோஹித் சர்மா!

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை விளம்பர தூதராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

News image

ஜெய் ஷாவுடன் ரோஹித் சர்மா - படம் - எக்ஸ் / ஜெய் ஷா

Updated On :25 நவம்பர் 2025, 4:17 pm

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை விளம்பர தூதராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா பதிவிட்டுள்ளதாவது,

''இந்தியா - இலங்கையில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரின் விளம்பர தூதராக ரோஹித் சர்மாவை அறிவிப்பதில் மிகுந்த பெருமையடைகிறேன். 2024 உலகக் கோப்பை தொடரை வென்ற கேப்டன் ரோஹித் சர்மாவை விட இந்தத் தொடருக்கு சிறந்த பிரதிநிதி யாரும் இல்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி பிப். 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 20 அணிகள் உலகக்கோப்பையில் களமிறங்க உள்ளன. இந்தத் தொடரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

Summary

Rohit Sharma is the brand ambassador for the 2026 T20 World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.