

2026 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப். 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்புவில் பிப். 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி பிப். 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது.
இதில், எட்டு திடல்கள் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மைதானங்கள் இந்தியாவில் உள்ளன, மீதமுள்ள மூன்று இலங்கையில் அமைந்திருக்கின்றன.
டி-20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி பிப். 7 ஆம் தேதி காலை கொழும்புவில் நடைபெறும்.
நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி அதே நாளில் மாலையில் மும்பையின் வான்கடே திடலில் நடைபெறுகிறது.
ஒரு அரையிறுதிப் போட்டி மார்ச் 4 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் அல்லது கொழும்பின் சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெறும். மும்பை வான்கடே திடலில் மார்ச் 5 ஆம் தேதி மற்றொரு அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த போட்டி, பிப். 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் 40 லீக் ஆட்டம், சூப்பர் 8 சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய திடல்களிலும் கொழும்புவிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையும் படிக்க | ஸ்மிருதியை ஏமாற்றிய காதலன்?திருமண விடியோக்களை நீக்கிய சக வீராங்கனைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.