2030-ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்!
2030 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோ நகரத்தில் இன்று (நவ. 26) நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டின் பொது அவைக்கூட்டத்தில், 2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத் நகரில் நடத்த முன்வருவதாக இந்தியா விருப்பத்தை முன்வைத்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் விருப்பத்தை 74 காமன்வெல்த் நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன்மூலம், வரும் 2030 ஆம் ஆண்டின் நூற்றாண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவின் தலைமையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன், கிளாஸ்கோவில் நடைபெற்ற பொது அவை அரங்கில் இருந்த இந்திய இசை மற்றும் நடனக்கலைஞர்கள் இசை வாத்தியங்களுடன் நடனமாடி அனைவரையும் உற்சாகமடைய செய்தனர்.
முன்னதாக, கனடாவின் ஹாமில்டன் நகரில் கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் முதல்முறையாக 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரூ.7,200 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
It has been officially announced that the 2030 Commonwealth Games will be held in the city of Ahmedabad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

