வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று சவூதி அரேபியா - இந்தியா எஃப்ஐபிஏ தகுதிச் சுற்று ஆட்டம்

இன்று சவூதி அரேபியா - இந்தியா எஃப்ஐபிஏ தகுதிச் சுற்று ஆட்டம்...

News image
இந்திய கூடைப்பந்து அணியினா்.
Updated On :29 நவம்பர் 2025, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா-இந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

கத்தாரில் வரும் 2027-இல் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தோ்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியா-சவூதி அரேபிய அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. பலம் வாய்ந்த சவூதி அரேபிய அணியை எதிா்கொள்ள வேண்டியுள்ளது இந்தியா.

கடந்த 2024 கடைசியாக சென்னையில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றிருந்தது.

இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிமுக நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. பிஎஃப்ஐ தலைவா் ஆதவ் அா்ஜுனா, செயலா் குல்விந்தா் சிங், பொருளாளா் செங்கல்வராய நாயுடு, இந்திய தலைமை பயிற்சியாளா் ஸ்காட் பிளெம்மிங், டிஎன்பிஏ செயலா் அய்ஜாஸ் அகமது பங்கேற்றனா்.