இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் நடிகர் தனஷ், நடிகை சமந்தாவை சந்தித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
மெட்டா ஏஐ நடத்திய மும்பை நிகழ்ச்சியில் சமந்தா உடன் டேவிட் பெக்கம் கலந்துரையாடல் நடத்தினார்.
யுனிசெஃப் நல்லெண்ண தூதராக இருக்கும் டேவிட் பெக்காம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட், இங்கிலாந்தின் முன்னாள் வீரரும் இன்டர் மியாமின் தற்போதைய இணை நிறுவனருமான டேவிட் பெக்காம் இந்தியாவின் யுனிசெஃப் அமைப்பில் உள்ள குழந்தைகளைச் சந்தித்தார்.
இன்னொரு நிகழ்வில் நடிகர் தனுஷையும் பெக்காம் சந்தித்து பேசினார்.
பலரும் இவரிடம் கையெழுத்துகளையும் புகைப்படங்களயும் வாங்கினார்கள். மும்பை நிகழ்வில் டேவிட் பெக்காம் பேசியதாவது:
இதுவரை வந்திராத இந்தியாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோதே மிகவும் பிரமித்துபோனேன். எனக்குப் பிடிக்கும் எனத் தெரியும். ஆனால், இந்தளவுக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரியாது.
இந்திய மக்கள், சூழ்நிலை, கலாசாரம், உணவு எல்லாமே பிடித்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரசிகர்களைப் போல உலகில் பல இடங்களில் இருப்பதில்லை என்றார்.
சமந்தா சுபம் படத்தை தயாரித்திருந்தார். அடுத்ததாக’ ரக்த் பிரம்மந்த்: தி ப்ளடி கிங்டம்’ தொடரில் நடித்துள்ளார்.
தனுஷின் தேரே இஷ்க் மெயின் படம் நேற்று (நவ.28) திரையரங்குகளில் வெளியானது.
Summary
Footage of football legend David Beckham, who is in India, meeting actor Dhanash and actress Samantha has attracted attention on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அளவிட முடியாத மகிழ்ச்சி... கவனம் பெறும் சமந்தாவின் பதிவு!

முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகை சமந்தா!

எங்கள் தங்கம்: சமந்தா படத்தின் டிரைலர் வெளியீடு!

என்னை வெறுப்பவர்களுக்கு... சமந்தா பதில்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



