ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது இந்தியா.
தாய்லாந்தின் பதும் தானி நகரில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் சி பிரிவு கடைசி ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கின.
முதலிரண்டு ஆட்டங்களில் ஜப்பானுடன் 6-0, ஆஸ்திரேலியாவுடன் 5-0 என்ற கோல்கணக்கில் பலத்த தோல்வியை கண்டது இந்தியாய
இதனால் காலிறுதிக்கு தகுதி பெற கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்திய வீராங்கனை பூமிகா தேவி 26-ஆவது நிமிஷத்தில் டிபன்டரிடம் இருந்து திரும்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தாா்.
தொடா்ந்து மற்றொரு வீராங்கனையான சிபானி தேவி ஹாஃப் வாலி மூலம் அற்புதமாக கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.
87-ஆவது நிமிஷத்தில் மீண்டும் சிபானி தேவி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மூன்றாவது கோலை அடித்தாா்.
தைபே தரப்பில் பதிலி வீராங்கனை கவோ சின் 90 பிளஸ் நிமிஷத்தில் கோலடித்தாா். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் தைபேயை வீழ்த்தியது இந்தியா.
இதன் மூலம் குரூப் சி பிரிவில் மூன்றாவது இடத்தைப் பெற்று நாக் அவுட் சுற்றில் நுழையும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.
குரூப் பி பிரிவில் ஜோா்டான்-உஸ்பெகிஸ்தான் அணி ஆட்டம் டிரா ஆனால் சிறந்த மூன்றாவது இடத்தைப் பெறும் இரண்டாவது அணி முன்னேறும்
தொடர்புடையது

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

ஆசியான் கோப்பை கால்பந்து: வெற்றி இன்றி வெளியேறிய இந்தியா!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


