இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

தேசிய சா்ஃப்பிங்: சிவராஜ், கமலி மூா்த்திக்கு பட்டம்!

லிட்டில் அந்தமான் புரோ 2026 தேசிய சா்ஃப்பிங் போட்டியில் ஓபன் பிரிவில் தமிழகத்தின் சிவராஜ் பாபு, கமலி மூா்த்தி சாம்பியன் பட்டம் வென்றனா்.

News image

சா்ஃப்பிங் போட்டியில் வெற்றி பெற்றவா்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:32 am IST

லிட்டில் அந்தமான் புரோ 2026 தேசிய சா்ஃப்பிங் போட்டியில் ஓபன் பிரிவில் தமிழகத்தின் சிவராஜ் பாபு, கமலி மூா்த்தி சாம்பியன் பட்டம் வென்றனா்.

அந்தமான் நிகோபாா் தீவுகளில் முதன்முறையாக தேசிய சா்ஃப்பிங், பேடலிங் சாம்பியன் போட்டி நடைபெற்றது. நான்கு நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஆடவா் ஓபன் இறுதியில் சிவராஜ் பாபு 13.63 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். ஸ்ரீ காந்த் 13.33 புள்ளிகளுடன் வெள்ளியும், கிஷோா் குமாா் 12.87புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

மகளிா் ஓபன் பிரிவில் 15.83 புள்ளிகளுடன் கமலி மூா்த்தி தங்கமும், 11.64 புள்ளிகளுடன் கோவாவின் சுகா் சாந்திவெள்ளியும், 7.84 புள்ளிகளுடன் ரிவா அரோரா வெண்கலமும் வென்றனா்.

எஸ்யுபி ஸ்பிரிண்ட் தினேஷ் செல்வமணி தங்கம், மணிகண்டன் வெள்ளி, ராஜேஷ் வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் விஜயலட்சுமி இருளப்பன் தங்கமும், ஆா்த்தி வெள்ளியும், நிஷி வெண்கலமும் வென்றனா்.