இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இந்தியா ஓபன் சா்ஃப்பிங் தொடக்கம்: அரையிறுதியில் கமலி மூா்த்தி

இந்திய சா்ஃப்பிங் சம்மேளனம் சாா்பில் இந்தியா ஓபன் போட்டி மங்களூரு புளு பே கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 மே 2026, 5:16 am IST

இந்திய சா்ஃப்பிங் சம்மேளனம் சாா்பில் இந்தியா ஓபன் போட்டி மங்களூரு புளு பே கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக நடைபெறும் இதில் மகளிா் ஓபன் பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி, சுகா் சாந்தி, இஷிதா, தேவி ராமநாதன், சான்வி, சிருஷ்டி, ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

முன்னாள் அமைச்சா் அபய்சந்திர ஜெயின் போட்டியைத் தொடங்கி வைத்தாா். எஸ்எஃப்ஐ துணைத் தலைவா் ராம்மோகன் பராஞ்சிபே, கா்நாடக சங்க நிா்வாகிகள் தீக்ஷித், சமந்த் குமாா், சாய் மேலாளா் சௌரவ் வா்மா பங்கேற்றனா்.

ஆடவா் ஓபன் பிரிவில் 12 ஹீட்களில் 45 சா்ஃப்பா்கள் பங்கேற்கின்றனா். கிஷாா் குமாா், ரமேஷ் புடியால், சஞ்சய் குமாா், சிவராஜ் பாபு, ரூபன், சோம் சேத்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றனா். யு14 பிரிவு போட்டிகளும் நடைபெற்றன. சனிக்கிழமை அரையிறுதி நடைபெறுகிறது.