மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்: செபாஸ்டியன் சாவே

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 11:40 pm

மாரத்தானில் உலக சாதனை நேரத்தை எட்டுவதற்கு முன்பு, மிகக் கடுமையான ஊக்கமருந்து பரிசோதனை கட்டுப்பாடுகளுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டதாக, கென்ய ஓட்டப் பந்தய வீரர் செபாஸ்டியன் சாவே தெரிவித்தார்.

சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மாரத்தான் பந்தயத்தை 2 மணி நேரத்துக்கு உள்ளாக கடப்பதென்பது, எட்ட முடியாத ஒன்றாக பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கென்ய வீரர் கெல்வின் கிப்டம் 2023-இல் 2 மணிநேரம், 35 விநாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் செபாஸ்டியன் சாவே, 2 மணிநேரத்துக்குள் மாரத்தானை நிறைவு செய்த முதல் போட்டியாளராக புதிய உலக சாதனை படைத்தார். பந்தய இலக்கை அவர், 1 மணிநேரம், 59.30 நிமிஷங்களில் அடைந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான புகார்களில் பிரபலமான கென்ய வீரர், வீராங்கனைகள் சிலரும் சிக்கினர். இச்சூழலில் புதிய சாதனை படைத்திருக்கும் செபாஸ்டியன் சாவே, இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கென்யாவில் ஊக்கமருந்து பயன்பாடு புற்றுநோய் போல பரவியிருக்கிறது.

எனவே, மிகக் கடுமையான பல ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கு என்னை ஆட்படுத்திக் கொள்வது என, நானும் எனது அணியினரும் முடிவு செய்தோம்.

ஏனெனில், போட்டியில் எனது முடிவுகளை எவரும் சந்தேகத்துடன் பார்க்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆற்றலைத் தூண்டும் எந்தவொன்றையும் பயன்படுத்தாமல், ஒழுக்கம், நேர்மை, கடின உழைப்பு, பொறுமை ஆகியவற்றாலும் வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதை உலகத்துக்கு காட்டவும் விரும்பினேன்.

இப்படியாக பந்தயங்களில் கலந்துகொள்ளும்போது, நம்முடன் போட்டியிடும் சக வீரர், வீராங்கனைகள் எந்தவொரு சந்தேகமும் இன்றி திருப்திகரமாக நம்முடன் போட்டியிட முடியும் என்று செபாஸ்டியன் சாவே கூறினார்.

பல முறை பறிசோதனை... பிசிசி வெளியிட்ட செய்தியின்படி, செபாஸ்டியன் சாவேயின் காலணிக்கான (ஷூ) ஸ்பான்சராக இருக்கும் அடிடாஸ் நிறுவனம், கடந்த 12 மாதங்களில் செபாஸ்டியனிடம் அவ்வப்போது ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான ஏஐயு}வுக்கு ரூ.47.32 லட்சம் வழங்கியுள்ளது.

இந்த காலகட்டத்தில், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பெர்லின் மாரத்தான் போட்டிக்கு முன்பாக 25 முறையும், இந்த லண்டன் மாரத்தானுக்கு முன்பாக 25 முறையும் குறிப்பிட்ட இடைவெளியில் செபாஸ்டியனிடம் ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.