பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

லோன் மூலமாக லிவர்பூல் அணியில் இணைந்த பார்சிலோனாவின் கேப்டன்!

பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் லிவர்பூல் அணிக்கு மாறியது குறித்து...

News image

ரொனால்ட் அரௌகா - படம்: எக்ஸ் / லிவர்பூல்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:42 pm IST

பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்ட் அரௌகா (27 வயது) லோன் அடிப்படையில் லிவர்பூல் அணிக்கு மாறியுள்ளார்.

உருகுவே நாட்டைச் சேர்ந்த டிஃபெண்டர் ரொனால்ட் அரௌகா பார்சிலோனா அணியில் முக்கியமான வீரராக இருந்தார். தற்போது வயது காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலமாக ரொனால்ட் அரௌகா தனது சம்பளத்தில் சிறிதளவு விட்டுக்கொடுத்துள்ளார். தொடக்கத்தில் லிவர்பூல் அணி 47 மில்லியன் பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ. 605.21 கோடி) கொடுத்து அவரை வாங்கவிருந்தது.

கடந்த 2025-26 சீசனில் ஐந்தாம் இடம் பிடித்த லிவர்பூல் அணி அதற்கு முந்தைய சீசனில் பிரீமியர் லீக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த மாற்றம் குறித்து ரொனால்ட் அரௌகா கூறியிருப்பதாவது:

என் கால்பந்து பயணத்தில் இது சரியான மாற்றம். இந்த மாற்றத்தை நான் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும். என்னை லிவர்பூல் அணி எடுக்க விரும்புவதாக தகவல் வெளியானதும் எல்லாமும் விரைவாகவே நடந்து முடிந்துவிட்டது. லிவர்பூல் அணிக்கு வந்தது மகிழ்ச்சி. விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Summary

Araujo calls Liverpool loan an ''ideal move'' after leaving Barcelona on pay-cut deal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.