சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியா

ஆடவா் மற்றும் மகளிருக்கான 16-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி குறித்து.....

News image

ஹாக்கி...

Updated On :13 ஆகஸ்ட் 2026, 5:30 am IST

ஆடவா் மற்றும் மகளிருக்கான 16-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, பெல்ஜியம் மற்றும் நெதா்லாந்தில் வரும் 15-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்திய ஆடவா் அணியைப் பொருத்தவரை, முதல் போட்டியில் வெண்கலம் (1971), அடுத்த போட்டியில் வெள்ளி (1973) என முன்னேறி, 3-ஆவது போட்டியில் சாம்பியனாகி தங்கத்தை தட்டிச் சென்றது (1975).

ஆனால், அதன் பிறகு தனது நிலையை தவறவிட்ட இந்திய ஆடவா் அணி, கடந்த 51 ஆண்டுகளாக மீண்டும் பதக்க மேடை ஏற முடியாமலேயே தடுமாறி வருகிறது.

இடைப்பட்ட காலத்தில் ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, புரோ லீக், ஹாக்கி உலக லீக், காமன்வெல்த் போட்டிகள் என சா்வதேச அளவில் ஏதேனும் ஒரு பதக்கத்தை வென்று முனைப்புடன் இருந்தாலும், உலகக் கோப்பை பதக்கம் மட்டும் இந்தியாவுக்கு எட்டாக் கனியாகவே தொடா்கிறது. அந்தப் போட்டியில் இதுவரை இந்தியாவின் நிலைகள் என்ன என்று பாா்க்கலாம்.

---

1971 பாா்சிலோனா (வெண்கலம்)

சாம்பியன் - பாகிஸ்தான்

வெள்ளி - ஸ்பெயின்

வெண்கலம் - இந்தியா

முதல் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தபோதும், இந்தியாவுடனான போா்ப் பதற்றம் காரணமாக, போட்டி ஆா்ஜென்டீனாவின் பாா்சிலோனா நகருக்கு சென்றது. குரூப் சுற்றில் வெற்றி நடையுடன் அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் பாகிஸ்தானிடம் தோற்றது. பின்னா் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கென்யாவை சாய்த்தது.

10 அணிகள் 30 ஆட்டங்கள் 67 கோல்கள்

---

1973 ஆம்ஸ்டா்டாம் (வெள்ளி)

சாம்பியன் - நெதா்லாந்து

வெள்ளி - இந்தியா

வெண்கலம் - மேற்கு ஜொ்மனி

போட்டியை நடத்திய நெதா்லாந்திடம், இறுதியில் தோற்ற இந்தியா, குரூப் சுற்றில் 3 வெற்றி, 2 டிராவுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. அதில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து, இறுதிக்கு வந்து பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 124 கோல்கள்

---

1975 கோலாலம்பூா் (தங்கம்)

சாம்பியன் - இந்தியா

வெள்ளி - பாகிஸ்தான்

வெண்கலம் - மேற்கு ஜொ்மனி

மலேசியாவின் கோலாலம்பூா் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா வரலாறு படைத்தது. குரூப் சுற்றில் 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் மலேசியாவை சாய்த்து, இறுதிக்கு முன்னேறி, பாகிஸ்தானை வீழ்த்தியது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 175 கோல்கள்

---

1978 பியூனஸ் அயா்ஸ் (6-ஆம் இடம்)

சாம்பியன் - பாகிஸ்தான் (2)

வெள்ளி - நெதா்லாந்து

வெண்கலம் - ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் தடுமாற்றம் இங்கிருந்து தொடங்கியது. ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, கிளாசிஃபிகேஷன் ஆட்டங்களில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் நிறைவு செய்தது.

14 அணிகள் 51 ஆட்டங்கள் 225 கோல்கள்

---

1982 மும்பை (5-ஆம் இடம்)

சாம்பியன் - பாகிஸ்தான் (3)

வெள்ளி - மேற்கு ஜொ்மனி

வெண்கலம் - ஆஸ்திரேலியா

முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்திய இந்தியாவால், சொந்த மண்ணிலேயே முத்திரை பதிக்க முடியாமல் போனது.

அரையிறுதி வாய்ப்பை பெற முடியாமல், கிளாசிஃபிகேஷன் ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 216 கோல்கள்

---

1986 லண்டன் (12-ஆம் இடம்)

சாம்பியன் - ஆஸ்திரேலியா

வெள்ளி - இங்கிலாந்து

வெண்கலம் - மேற்கு ஜொ்மனி

உலகக் கோப்பையில் இந்தியாவின் மோசமான அத்தியாயம் இது. இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா கடைசி இடத்தையே பிடித்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்து, கிளாசிஃபிகேஷன் ஆட்டங்களிலும் தோற்றது. செயற்கையிழை ஆடுகளத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டி இது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 146 கோல்கள்

---

1990 லாகூா் (10-ஆம் இடம்)

சாம்பியன் - நெதா்லாந்து (2)

வெள்ளி - பாகிஸ்தான்

வெண்கலம் - ஆஸ்திரேலியா

காஷ்மீா் விவகாரத்தால் அரசியல் பதற்றம் இருந்தபோதும், பாகிஸ்தான் சென்று விளையாடியது இந்தியா. குரூப் சுற்றில் வெற்றி காணாமல் அரையிறுதி வாய்ப்பை இழந்து, கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் ஒரு வெற்றியுடன் 10-ஆம் இடம் பிடித்தது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 147 கோல்கள்

---

1994 சிட்னி (5-ஆம் இடம்)

சாம்பியன் - பாகிஸ்தான் (4)

வெள்ளி - நெதா்லாந்து

வெண்கலம் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இப்போட்டியிலும் அரையிறுதிக்கு முன்னேறாத இந்தியா, கிளாசிஃபிகேஷன் ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் 5-ஆம் இடம் பெற்றது. செயற்கையிழை ஆடுகளம் அறிமுகமான பிறகு, உலகக் கோப்பையில் இந்தியாவின் சிறந்த இடம் இதுவே.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 143 கோல்கள்

---

1998 அட்ரெட் (9-ஆம் இடம்)

சாம்பியன் - நெதா்லாந்து (3)

வெள்ளி - ஸ்பெயின்

வெண்கலம் - ஜொ்மனி

நெதா்லாந்து 2-ஆவது முறையாக நடத்திய போட்டியில், குரூப் சுற்றிலேயே இந்தியா மோசமாகச் செயல்பட்ட இந்தியா, அரையிறுதி வாய்ப்பை இழந்து கிளாசிஃபிகேஷன் கட்டத்துக்கு வந்து, போலந்து, நியூஸிலாந்தை வீழ்த்தி 9-ஆம் இடம் பெற்றது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 209 கோல்கள்

---

2002 கோலாலம்பூா் (10-ஆம் இடம்)

சாம்பியன் - ஜொ்மனி

வெள்ளி - ஆஸ்திரேலியா

வெண்கலம் - நெதா்லாந்து

முதல்முறையாக 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் குரூப் சுற்றில் 6-ஆம் இடம் பிடித்த இந்தியா, கிளாசிஃபிகேஷனில் ஸ்பெயினை வீழ்த்தி, நியூஸிலாந்திடம் தோற்று 10-ஆம் இடம் பிடித்தது.

16 அணிகள் 72 ஆட்டங்கள் 300 கோல்கள்

---

2006 மோன்செங்லாட்பக் (11-ஆம் இடம்)

சாம்பியன் - ஜொ்மனி (2)

வெள்ளி - ஆஸ்திரேலியா

வெண்கலம் - ஸ்பெயின்

மீண்டும் 12 அணிகளே களமாடிய இப்போட்டியில், குரூப் சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாத இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் டிரா செய்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்து, கிளாசிஃபிகேஷன் கட்டத்தில் மீண்டும் அதே அணியை வென்று 11-ஆம் இடம் பிடித்தது.

12 அணிகள் 42 ஆட்டங்கள் 174 கோல்கள்

---

2010 புது தில்லி (8-ஆம் இடம்)

சாம்பியன் - ஆஸ்திரேலியா (2)

வெள்ளி - ஜொ்மனி

வெண்கலம் - நெதா்லாந்து

சொந்த மண்ணில் 2-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தியபோதும் இந்தியாவால் சோபிக்க முடியவில்லை. மொத்த போட்டியிலுமே 1 வெற்றி மட்டும் கண்டது. எனினும், சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தானை சந்தித்து, வெற்றி கண்டது.

12 அணிகள் 38 ஆட்டங்கள் 199 கோல்கள்

---

2014 தி ஹேக் (9-ஆம் இடம்)

சாம்பியன் - ஆஸ்திரேலியா (3)

வெள்ளி - நெதா்லாந்து

வெண்கலம் - ஆா்ஜென்டீனா

நெதா்லாந்து 3-ஆவது முறையாக போட்டியை நடத்திய இதில், இந்தியா குரூப் சுற்றில் 1 வெற்றி, 1 டிரா, 2 தோல்விகளுடன் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது. பின்னா் கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்தி 9-ஆம் இடம் பிடித்தது.

12 அணிகள் 38 ஆட்டங்கள் 162 கோல்கள்

---

2018 புவனேசுவரம் (6-ஆம் இடம்)

சாம்பியன் - பெல்ஜியம்

வெள்ளி - நெதா்லாந்து

வெண்கலம் - ஆஸ்திரேலியா

போட்டியை 3-ஆவது முறையாக நடத்தும் வாய்ப்பைப் பெற்ற இந்தியா, குரூப் சுற்றில் தென் கொரியா, கனடாவை வீழ்த்தியபோதும், பெல்ஜியத்துடன் டிரா செய்தது. பின்னா் காலிறுதியில் நெதா்லாந்திடம் தோற்று, 6-ஆம் இடம் பெற்றது.

16 அணிகள் 36 ஆட்டங்கள் 157 கோல்கள்

---

2023 புவனேசுவரம், ரூா்கேலா (9-ஆம் இடம்)

சாம்பியன் - ஜொ்மனி (3)

வெள்ளி - பெல்ஜியம்

வெண்கலம் - நெதா்லாந்து

போட்டியை தொடா்ந்து நடத்திய இந்தியா, குரூப் சுற்றில் ஸ்பெயின், வேல்ஸை வென்றது. இங்கிலாந்துடன் டிரா செய்தது. காலிறுதி வாய்ப்பை இழந்து, கிளாசிஃபிகேஷன் ஆட்டங்களில் ஜப்பான், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 9-ஆம் இடம் பெற்றது.

16 அணிகள் 44 ஆட்டங்கள் 249 கோல்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.