பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த அணிகள்!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த 10 அணிகள் பற்றி...

News image

ஃபிஃபா உலகக்கோப்பை

Updated On :11 ஜூலை 2026, 8:05 pm IST

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றில் அதிக கோல்களை அடித்த அணிகளின் பட்டியலை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.

அதில், 5 முறை உலகக்கோப்பை வென்ற பிரேசில் அணி 247 கோல்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 4 முறை உலகக்கோப்பை வென்ற இத்தாலி 128 கோல்களுடன் 5-ம் இடத்தில் உள்ளது. 10-வது இடத்தை ஹங்கேரி, ஸ்வீடன் அணிகள் தலா 87 கோல்களுடன் பங்கிட்டுள்ளனர்.

அதிக கோல்கள் அடித்த அணிகளின் பட்டியல்:

1) பிரேசில்

பங்கேற்ற தொடர்கள்: 23

விளையாடியப் போட்டிகள்: 119

அடித்த கோல்கள்: 247

கோல்கள் சராசரி: 2.07

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1958, 1962, 1970, 1994 & 2002)

பிரேசில் அணிக்கு அதிகபட்சமாக ரொனால்டோ (15), பீலே (12) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

பிரேசில் வீரர் ரொனால்டோ

பிரேசில் வீரர் ரொனால்டோ - FIFA

2) ஜெர்மனி

பங்கேற்ற தொடர்கள்: 21

விளையாடியப் போட்டிகள்: 116

அடித்த கோல்கள்: 243

கோல்கள் சராசரி: 2.09

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1954, 1974, 1990 & 2014)

ஜெர்மனி அணிக்கு அதிகபட்சமாக மிரோஸ்லாவ் க்ளோஸ் (16), கெர்ட் முல்லர் (14) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

மிரோஸ்லாவ் க்ளோஸ்

மிரோஸ்லாவ் க்ளோஸ்

3) ஆர்ஜென்டீனா

பங்கேற்ற தொடர்கள்: 19

விளையாடியப் போட்டிகள்: 93

அடித்த கோல்கள்: 166

கோல்கள் சராசரி: 1.78

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1978, 1986 & 2022)

ஆர்ஜென்டீனா அணிக்கு அதிகபட்சமாக லியோனல் மெஸ்ஸி (21), கேப்ரியல் பாடிஸ்டுடா (10) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி - AP

4) ஃபிரான்ஸ்

பங்கேற்ற தொடர்கள்: 17

விளையாடியப் போட்டிகள்: 79

அடித்த கோல்கள்: 152

கோல்கள் சராசரி: 1.92

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1998 & 2018)

ஃபிரான்ஸ் அணிக்கு அதிகபட்சமாக கிலியன் எம்பாப்பே (20), ஜஸ்ட் ஃபோன்டைன் (13) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

கிலியன் எம்பாப்பே

கிலியன் எம்பாப்பே - AP

5) இத்தாலி

பங்கேற்ற தொடர்கள்: 18

விளையாடியப் போட்டிகள்: 83

அடித்த கோல்கள்: 128

கோல்கள் சராசரி: 1.54

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1934, 1938, 1982 & 2006)

இத்தாலி அணிக்கு அதிகபட்சமாக கிறிஸ்டியன் வியேரி (9), பாவ்லோ ரோஸ்ஸி (9), ராபர்டோ பாக்கியோ (9) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

பாவ்லோ ரோஸ்ஸி,  கிறிஸ்டியன் வியேரி, ராபர்டோ பாக்கியோ.

பாவ்லோ ரோஸ்ஸி, கிறிஸ்டியன் வியேரி, ராபர்டோ பாக்கியோ.

6) ஸ்பெயின்

பங்கேற்ற தொடர்கள்: 17

விளையாடியப் போட்டிகள்: 73

அடித்த கோல்கள்: 119

கோல்கள் சராசரி: 1.63

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (2010)

ஸ்பெயின் அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வில்லா (9), பெர்னாண்டோ மோரியண்டஸ் (5) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

டேவிட் வில்லா

டேவிட் வில்லா

7) இங்கிலாந்து

பங்கேற்ற தொடர்கள்: 17

விளையாடியப் போட்டிகள்: 79

அடித்த கோல்கள்: 115

கோல்கள் சராசரி: 1.46

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1966)

இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஹாரி கேன் (14), கேரி லினெக்கர் (10) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

ஹாரி கேன்

ஹாரி கேன்

8) நெதர்லாந்து

பங்கேற்ற தொடர்கள்: 12

விளையாடியப் போட்டிகள்: 59

அடித்த கோல்கள்: 107

கோல்கள் சராசரி: 1.81

சிறந்த ஆட்டங்கள்: இரண்டாம் இடம் (1974, 1978 மற்றும் 2010)

நெதர்லாந்து அணிக்கு அதிகபட்சமாக ஜானி ரெப் (7), டென்னிஸ் பெர்க்காம்ப் (6) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

ஜானி ரெப்

ஜானி ரெப்

9) உருகுவே

பங்கேற்ற தொடர்கள்: 15

விளையாடியப் போட்டிகள்: 62

அடித்த கோல்கள்: 92

கோல்கள் சராசரி: 1.48

சிறந்த ஆட்டங்கள்: சாம்பியன்கள் (1930 & 1950)

உருகுவே அணிக்கு அதிகபட்சமாக ஆஸ்கார் மிகுஸ் (8), லூயிஸ் சுரேஸ் (7) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

ஆஸ்கார் மிகுஸ்

ஆஸ்கார் மிகுஸ்

10) ஹங்கேரி

பங்கேற்ற தொடர்கள்: 9

விளையாடியப் போட்டிகள்: 32

அடித்த கோல்கள்: 87

கோல்கள் சராசரி: 2.72

சிறந்த ஆட்டங்கள்: இரண்டாம் இடம் (1954)

ஹங்கேரி அணிக்கு அதிகபட்சமாக சாண்டோர் கோசிஸ் (11), லாஜோஸ் டிச்சி (7) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

சாண்டோர் கோசிஸ்

சாண்டோர் கோசிஸ்

10) ஸ்வீடன்

பங்கேற்ற தொடர்கள்: 13

விளையாடியப் போட்டிகள்: 55

அடித்த கோல்கள்: 87

கோல்கள் சராசரி: 1.58

சிறந்த ஆட்டங்கள்: இரண்டாம் இடம் (1958)

ஸ்வீடன் அணிக்கு அதிகபட்சமாக கென்னட் ஆண்டர்சன் (5), ஹென்ரிக் லார்சன் (5) ஆகியோர் கோல் அடித்துள்ளனர்.

கென்னட் ஆண்டர்சன், ஹென்ரிக் லார்சன்.

கென்னட் ஆண்டர்சன், ஹென்ரிக் லார்சன்.

Summary

Teams that have scored the most goals in World Cup history!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.