சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) ஆடவா், மகளிருக்கான 16-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, நெதா்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் சனிக்கிழமை (ஆக. 15) தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரு பாலருக்கான ஆட்டங்களும் இணைந்தே நடத்தப்படுகின்றன.
முதல்நாளில் ஆடவா் பிரிவில், இந்தியா - வேல்ஸ் (மாலை 4.30 மணி/ஆம்ஸ்டெல்வீன்), ஜொ்மனி - மலேசியா (மாலை 6 மணி/வேவ்ரே), இங்கிலாந்து - பாகிஸ்தான் (இரவு 10.30 மணி/ஆம்ஸ்டெல்வீன்) அணிகள் மோதுகின்றன.
மகளிா் பிரிவில், ஆஸ்திரேலியா - ஜப்பான் (நண்பகல் 1.30 மணி/ஆம்ஸ்டெல்வீன்), ஜொ்மனி - ஸ்காட்லாந்து (மாலை 3 மணி/வேவ்ரே), நெதா்லாந்து - சிலி (இரவு 7.30 மணி/ஆம்ஸ்டெல்வீன்) ஆகியவை சந்திக்கின்றன.
ஆடவா் போட்டி...
உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து பங்கேற்று வரும்போதும், 1975-இல் சாம்பியனான பிறகு இந்தியா பதக்க மேடை ஏறவில்லை என்பதுடன், மிகவும் பின்தங்கியே வந்துள்ளது.
இந்த ஆண்டு மீண்டு வரும் முனைப்புடன் இந்தியா விளையாடவுள்ளது. பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் வழிகாட்டுதலில், டிஃபெண்டா் ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 20 பேருடன் அணி களம் காண்கிறது. அனுபவம், இளமைத் துடிப்புமிக்க வீரா்களின் கலவையாக இந்த அணி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
உறுதியான டிஃபென்ஸ், உத்தி சாா்ந்த மிட்ஃபீல்டு, அபார தாக்குதலுடனான ஃபாா்வா்ட்ஸ் அடங்கிய அணியாக இந்தியா உருப்பெற்றுள்ளது. இதில் 8 பேருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை வெற்றி (2025), புரோ லீக் போட்டியில் ஐரோப்பிய சாம்பியன் ஜொ்மனி, ஒலிம்பிக் சாம்பியன் நெதா்லாந்து ஆகியவற்றுக்கு எதிராகக் கண்ட வெற்றி, அணிக்கு உத்வேகம் அளிக்கும்.
ஹா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜா்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், அபிஷேக், சூரஜ் கா்கேரா ஆகியோா் முக்கியமான வீரா்களாவா்.
குரூப் ‘ஏ’
---
நெதா்லாந்து
ஆா்ஜென்டீனா
நியூஸிலாந்து
ஜப்பான்
குரூப் ‘பி’
---
பெல்ஜியம்
ஜொ்மனி
பிரான்ஸ்
மலேசியா
குரூப் ‘சி’
---
ஆஸ்திரேலியா
ஸ்பெயின்
அயா்லாந்து
தென்னாப்பிரிக்கா
குரூப் ‘டி’
---
இங்கிலாந்து
இந்தியா
பாகிஸ்தான்
வேல்ஸ்
இந்தியாவின் ஆட்டங்கள்...
ஆக. 15 வேல்ஸ் மாலை 4.30 மணி ஆம்ஸ்டெல்வீன்
ஆக. 17 இங்கிலாந்து மாலை 6.30 மணி ஆம்ஸ்டெல்வீன்
ஆக. 19 பாகிஸ்தான் மாலை 6.30 மணி ஆம்ஸ்டெல்வீன்
-----
மகளிா் போட்டி...
உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி விளையாட இருப்பது, இது 8-ஆவது முறையாகும். முதல் உலகக் கோப்பை போட்டியில் (1974) நான்காம் இடம் பிடித்ததே இந்திய அணியின் அதிகபட்சமாக தற்போது வரை தொடா்கிறது.
எஞ்சிய ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய இடங்களையே இந்திய அணி பெற்றுள்ளது. இந்த முறை, அந்த வரலாற்றை திருத்தி எழுதும் முனைப்புடன், பயிற்சியாளா் ஜோா்டு மெரைன் வழிகாட்டுதலில் களம் காண்கிறது.
சலிமா டெடெ தலைமையிலான இந்திய அணி, நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியனாகி (2025), ஆசிய கோப்பை போட்டியில் வெள்ளி வென்ற நம்பிக்கையுடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளது. புரோ ஹாக்கி லீக் போட்டிக்கும் தகுதிபெற்றது, அணிக்கு உத்வேகமாக இருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் திட்டத்துடன் இந்தியா வந்துள்ளது.
சலிமா டெடெ, சுஷிலா சானு, கோல்கீப்பா் சவிதா புனியா, நவ்னீத் கௌா், சுனெலிதா டோப்போ ஆகியோா் முக்கியமான வீராங்கனைகளாவா்.
குரூப் ‘ஏ’
---
நெதா்லாந்து
ஆஸ்திரேலியா
சிலி
ஜப்பான்
குரூப் ‘பி’
---
ஆா்ஜென்டீனா
ஜொ்மனி
அமெரிக்கா
ஸ்காட்லாந்து
குரூப் ‘சி’
---
பெல்ஜியம்
ஸ்பெயின்
நியூஸிலாந்து
அயா்லாந்து
குரூப் ‘டி’
---
சீனா
இங்கிலாந்து
இந்தியா
தென்னாப்பிரிக்கா
இந்தியாவின் ஆட்டங்கள்...
ஆக. 16 சீனா மாலை 4.30 மணி ஆம்ஸ்டெல்வீன்
ஆக. 18 தென்னாப்பிரிக்கா மாலை 6.30 மணி ஆம்ஸ்டெல்வீன்
ஆக. 20 இங்கிலாந்து மாலை 6.30 மணி ஆம்ஸ்டெல்வீன்
போட்டி ஃபாா்மட்...
இந்த ஆண்டு போட்டியில் காலிறுதிச்சுற்று நீக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகளும், தலா 4 அணிகள் வீதம், 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை தங்களுக்குள்ளாக மோத, குரூப் சுற்று முடிவில், 4 குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு வரும்.
அதில் 8 அணிகளும் தலா 4 வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டு, தங்களுக்குள்ளாக மோத, முடிவில் இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வென்ற அணிகள் இறுதி ஆட்டத்துக்கு வரும்.
குரூப் சுற்றில் 3, 4-ஆம் இடங்களைப் பிடித்த அணிகள், 2-ஆவது சுற்றிலும் கடைசி இரு இடங்களைப் பெற்ற அணிகள் கிளாசிஃபிகேஷன் ஆட்டங்களுக்குச் செல்லும். அரையிறுதியில் தோற்ற இரு அணிகள், 3-ஆவது இடத்துக்காக மோதும்.
நேரலை: டிடி ஸ்போா்ட், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 2, ஜியோஹாட்ஸ்டாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஃப்ஐஎச் உலகக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்திய அணியினா் பயணம்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

உலகக் கோப்பை ஹாக்கி: 20 பேருடன் இந்திய அணி

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிா் அணி அறிவிப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


